wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 4 புதிர்ப்போட்டி

Total questions: 30

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

குட்டி போடும் விலங்கைத் தெரிவு செய்க.

a)

ஆமை

b)

கடலாமை

c)

வெளவால்

d)

வண்ணத்துப்பூச்சி

2.

பின்வரும் விதிமுறைகளில் எது தவறு?

a)

ஆசிரியர் அனுமதியோடுதான் அறிவியல் அறையில் நுழைய வேண்டும்.

b)

குப்பைகள் அல்லது கழிவுகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.

c)

அறிவியல் அறையில் சத்தம் போடுதல், சண்டை போடுதல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

d)

ஆசிரியர் அனுமதியின்றி அறிவியல் கருவிகளை வெளியே எடுத்து பயன்படுத்தலாம்.

3.

அறிவியல் அறையில் செய்முறை பயிற்சியின் போது ஒரு மாணவனுக்கு விபத்து ஏற்பட்டது. காயங்கள் சம்பந்தமான விபரங்களை யாரிடம் தெரிவிக்க வேண்டும்?

a)

வகுப்பு ஆசிரியர்

b)

தலைமையாசிரியர்

c)

அறிவியல் ஆசிரியர்

d)

மாணவர் நலப்பொறுப்பாசிரியர்

4.

நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நெஞ்சுப்பகுதி எழும்பி விரிவடைகிறது.

a)

மேல்

b)

கீழ்

c)

சமமாக

5.

தோலில் சுரப்பியில் உள்ள நீர் எதுவாக நுண்துவாரங்கள் வழி வெளியேறும்?

a)

நீராவி

b)

கரிவளி

c)

சிறுநீரகம்

d)

வியர்வை

6.

செரிமனமாகாத உணவு எதுவாக வெளியேற்றப்படுகிறது?

a)

மலம்

b)

நீராவி

c)

வியர்வை

d)

சிறுநீரகம்

7.

உடல் நலம் பாதிக்காமல் இருக்க

a)

மழையில் நனைய வேண்டும்.

b)

கழிவுகளை அகற்ற வேண்டும்.

c)

சிறுநீரை அடக்கி வைக்க வேண்டும்.

d)

மலம் கழிப்பதைத் தள்ளிப் போட வேண்டும்.

8.

புகைமூட்டம் மற்றும் தூசு படலத்தால் ஏற்படும் விளைவைத் தேர்ந்தெடுக.

a)

இருதய பாதிப்பு

b)

வாய்ப்புண்

c)

கண் எரிச்சல்

d)

சிறுநீரகப் பாதிப்பு

9.

கீழ்க்காண்பனவற்றுள் எது மனிதனுக்கு தீய விளைவை ஏற்படுத்தும் பழக்கமாகும்?

a)

அதிகமான நீரை அருந்துதல்

b)

பல வகையான உணவை உண்ணுதல்

c)

முறையான உடற்பயிற்சியை மேற்கொள்ளுதல்

d)

போதைப் பொருளை உட்கொள்ளுதல்

10.

மனிதனின் தூண்டலையும் துலங்களையும் காட்டும் சரியான இணை எது?

a)

வெடிசத்தம் கேட்டல் - காதுகளை மூடிக்கொள்ளுதல்

b)

துர்நாற்றம் வீசுதல் - முகத்தைச் சுளித்தல்

c)

முள்ளை மிதித்தல் - கண்களை மூடிக்கொள்ளுதல்

d)

வெளிச்சத்தைப் பார்த்தல் - காதுகளை மூடிக்கொள்ளுதல்

11.

செடிகளுக்குப் போடப்பட்ட உரத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க தக்காளிப் பழங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

a)

உற்றறிதல்

b)

வகைப்படுத்துதல்

c)

முன் அனுமானம்

d)

கருதுகோள் உருவாக்குதல்

12.

படத்தையொட்டி மூச்சை உள்ளிழுக்கும்போது காற்று செல்லும் பாதையைக் காட்டும் சரியான விடை யாது?

a)

மூச்சுக்குழாய் - மூக்கு - நுரையீரல்

b)

மூக்கு - மூச்சுக்குழாய் - நுரையீரல்

c)

நுரையீரல் - மூச்சுக்குழாய் - மூக்கு

13.

மேற்கண்ட உறுப்பு வெளியேற்றும் கழிவுப் பொருள் என்ன ?

a)

வியர்வை

b)

மலம்

c)

சிறுநீர்

d)

கரிவளி

14.

இந்த ஆராய்வின் வழி வெட்டுக்கிளியின் சுவாச உறுப்பு அதன் ____________________உள்ளது.

a)

வால் பகுதியில்

b)

வயிற்றுப் பகுதியில்

c)

வயிற்றில்

d)

கால்களில்

15.

தவளை போன்று சுவாசிக்கும் மூன்று விலங்குகளை தேர்ந்தெடு.

a)
b)
c)
d)
16.

இந்த விலங்கின் சுவாச உறுப்பு என்ன?

a)

நுரையீரல்

b)

சுவாசத்துளை

c)

ஈரமானத் தோல்

d)

செவுள்

17.

இது _________________ முதுகெலும்பு ஆகும்.

a)

ஆமை

b)

ஒட்டகம்

c)

மீன்

d)

இறால்

18.

அமுதன் வெண்பலகையில் உள்ள எழுத்துக்களைப் பார்க்க முடியவில்லை. அவன் மூக்கு கண்ணாடியை அணிந்தப் பின்னர், அந்த எழுத்துக்களை தெளிவாகப் பார்க்க முடிந்தது.

இந்நிகழ்வு ஒளியின் எத்தன்மையைக் குறிக்கிறது?

a)

ஒலி விலகல்

b)

ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்

c)

ஒளி பிரதிபலிப்பு

d)

ஒலி தடைப்படுதல்

19.
a)

குவிக்கண்ணாடி

b)

மறைநோக்காடி

20.

முதுகெலும்பு இல்லாத 3 விலங்குகளைத் தேர்ந்தெடு.

a)
b)
c)
d)
21.

திமிங்கலத்தின் சுவாச உறுப்பு என்ன?

a)

நுரையீரல்

b)

சுவாசத்துளை

c)

ஈரமானத் தோல்

d)

செவுள்

22.

இந்த விலங்கின் சுவாச உறுப்பு என்ன?

a)

நுரையீரல்

b)

சுவாசத்துளை

c)

ஈரமானத் தோல்

d)

செவுள்

23.

எந்த விலங்கு முதுகெலும்பு உடையது?

a)
b)
c)
d)
24.

கீழ்க்காணும் நடவடிக்கைகளுள் எந்த நடவடிக்கை அதிகமான மூச்சு விடும் விகிதத்தை காட்டுகிறது ?

a)

உறங்குதல்

b)

நடத்தல்

c)

ஓடுதல்

d)

சாப்பிடுதல்

25.
a)

குவிக்கண்ணாடி

b)

மறைநோக்காடி

26.

இப்படம் எதைக் குறிக்கிறது?

a)

ஒளி வளைந்து பயணிக்கும்

b)

ஒளி நீரில் பயணிக்கும்

c)

ஒளி கண்ணாடியில் பயணிக்கும்

d)

ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்

27.

இப்படத்திலிருந்து அறிந்து கொண்டது என்ன ?

a)

தாவரம் வளர காற்று தேவை

b)

தாவரம் வளர நீர் தேவை

c)

தாவரம் வளர சூரிய ஒளி தேவை

d)

மேற்கூறிய அனைத்தும் தேவை

28.
  • தனது வாழ்க்கைச் சுழற்சியில் மூன்று சுவாச உறுப்புகள் கொண்டது.
  • அது ஓர் ஈருலக வாழியாகும்.


மேற்காணும் கூற்றுக்குப் பொருத்தமான விலங்கு யாது?

a)
b)
c)
d)
29.

பச்சையம் தாவரத்தின் எந்த பகுதியில் உள்ளது ?

a)

வேர்

b)

இலை

c)

கிளை

30.

சக்தி என்றால் என்ன?

a)

ஒரு வேலையைச் செய்வதற்கான வேகம்

b)

ஒரு வேலையைச் செய்வதற்கான நினைவு

c)

ஒரு வேலையைச் செய்வதற்கான ஆற்றல்

d)

ஒரு வேலையைச் செய்வதற்கான தொழில்நுட்பம்