Worksheetsவாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத் தகவல்களை அடையாளம் காண்பர்.
Total questions: 3
Worksheet time: 6mins
திருக்குறள்
பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் திருவள்ளுவர். சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைப்பர். இவர் இயற்றிய திருக்குறளில் மொத்தம் 1330 குறள்கள் உள்ளன. திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று மூன்று பிரிவுகள் உள்ளன.
கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் எது திருக்குறளின் முக்கியக் கருத்து அல்ல?
A. திருக்குறளைக் கற்பது மிகவும் நல்லது.
B. திருக்குறளில் மொத்தம் 1330 குறள்கள் உள்ளன.
C. திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் திருவள்ளுவர்.
D. திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று மூன்று பிரிவுகள் உள்ளன.
புறப்பாட நடவடிக்கையில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள்
புறப்பாட நடவடிக்கை மாணவர் பருவத்தில் இன்றியமையாததாக விளங்குகின்றது.
பள்ளிப்புறப்பாட நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபடுவதால், அவர்கள் அடையும் நன்மைகள் எண்ணிலடங்கா. சீருடை இயக்கங்களில் மாணவர்கள் ஈடுபடுவதன் மூலம் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள முடிகிறது.
A. மாணவர் பருவத்தில் இன்றியமையாததாக விளங்குகின்றது.
B. சீருடை இயக்கங்களில் மாணவர்கள் ஈடுபடுவதன் மூலம் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள முடிகிறது.
C. பள்ளிப்புறப்பாட நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபடுவதால், அவர்கள் அடையும் நன்மைகள் எண்ணிலடங்கா.
காற்றுத் தூய்மைக்கேடு ஏற்படுவதற்கான காரணங்கள்
காற்று என்பது உலகத்தில் உள்ள ஐம்பூதங்களில் ஒன்றும் இயற்கையில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. மனித வாழ்க்கைக்கு அடிப்படையானது காற்று எனலாம். பெருகிவரும் வாகனப் பயன்பாடும் தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் புகையும் காற்றுத் தூய்மைக்கேடு ஏற்படுவதற்கான காரணங்களாகும்.
A. மனித வாழ்க்கைக்கு அடிப்படையானது காற்று எனலாம்.
B. காற்று என்பது உலகத்தில் உள்ள ஐம்பூதங்களில் ஒன்றும் இயற்கையில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
C. பெருகிவரும் வாகனப் பயன்பாடும் தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் புகையும் காற்றுத் தூய்மைக்கேடு ஏற்படுவதற்கான காரணங்களாகும்.
