Worksheetsதெரிவுவிடைக் கருத்தறிதல்
Total questions: 1
Worksheet time: 8mins
ஒரு நாள் கோமதியும் கலாவும் பள்ளிக்குச் சென்று கொண்டு இருந்தார்கள். அந்த வேளையில், பலர் சந்தைக்கும் வேலைக்கும் கடைக்கும் சென்று கொண்டிருந்தார்கள். சாலையில் ஒரு கண் பார்வையற்ற மூதாட்டி இருந்தார். அப்போது சாலையில் நிறைய வாகனங்கள் விரைந்து சென்று கொண்டிருந்தன. எதையும் பார்க்க முடியாததால் மூதாட்டி சாலையைக் கடக்கச் சிரமப்பட்டார். வழிப்போக்கர் யாரும் அவருக்கு உதவி செய்யவில்லை. கோமதி உதவி செய்ய நினைத்தாள். ஆனால், கலா வேண்டாம் என்றாள்.
கோமதி மூதாட்டியின் அருகில் சென்று அன்பாகப் பேசினாள். அவள் மூதாட்டியின் கையைப் பிடித்துச் சாலையைக் கடந்தாள். மூதாட்டி கோமதிக்கு நன்றி கூறினார். பிறகு, இதைப் பற்றிக் கோமதி தன் பெற்றோரிடம் கூறினாள்.
கோமதி எங்கே சென்று கொண்டிருந்தாள்?
கடைக்கு
வேலைக்கு
பள்ளிக்கு
சந்தைக்கு
மூதாட்டியால் ஏன் சாலையைக் கடக்க முடியவில்லை?
அவர் வயதானவர் என்பதால்
நிறைய வாகனங்கள் சென்றதால்
அவர் கண்பார்வை அற்றவர் என்பதால்
அவர் தவித்ததால்
மூதாட்டிக்கு யார் உதவி செய்தார்?
கலா
கோமதி
பெற்றோர்
வழிப்போக்கர்
கோமதி எப்படி உதவி செய்தாள்?
அவள் மூதாட்டியின் கையைப் பிடித்தாள்
அவள் மூதாட்டியிடம் அன்பாகப் பேசினாள்
அவள் வழிப்போக்கரிடம் உதவி கேட்டாள்
அவள் அவருடன் சாலையைக் கடந்தாள்
மூதாட்டி யாரிடம் நன்றி கூறினார்
கோமதியிடம்
கலாவிடம்
வேலைக்குச் சென்றவர்களிடம்
வழிப்போக்கரிடம்
இறுதியில் கோமதியின் பெற்றோர்கள் என்ன செய்திருப்பார்கள் என்று நீ நினைக்கிறாய்?
