Worksheetsசுட்டெழுத்து / ஒருமை பன்மை ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சுட்டெழுத்து எத்தனை வகைப்படும்?
a)
2
b)
3
c)
4
d)
6
2.
இவற்றுள் எது சுட்டெழுத்து அல்ல?
a)
அ
b)
இ
c)
உ
d)
எ
3.
அவன் என் உயிர் நண்பண்.
இந்த வாக்கியத்தில் சுட்டெழுத்து எங்கு இடம்பெற்றுள்ளது?
a)
அவன்
b)
என்
c)
உயிர்
d)
நண்பன்
4.
இவற்றுள் எது தொலைவில் இருப்பவரைச் சுட்டுகிறது?
a)
அம்மா
b)
அவள்
c)
உவன்
d)
இவர்
5.
எந்த இணை சரியானது?
a)
கரம் - கரம்கள்
b)
கரம் - கரங்கள்
c)
கரம் - கரன்கள்
d)
கரம் - கரகள்
6.
எந்த இணை பிழையானது?
a)
அன்னம் - அன்னங்கள்
b)
நாடகம் - நாடகங்கள்
c)
சடை - சடைகள்
d)
மான் - மாங்கள்
7.
"வாக்கியங்கள்" எனும் சொல்லின் ஒருமை யாது?
a)
வாக்கியன்
b)
வாக்கியம்
c)
வாக்கியங்
8.
இஃது என் நண்பனின் பந்து.
இந்த வாக்கியத்தில் எது சுட்டெழுத்து கொண்ட சொல்?
a)
இஃது
b)
என்
c)
நண்பனின்
d)
பந்து
9.
இவற்றுள் எது சரி?
a)
ஒரு அணில்
b)
ஓர் தும்பி
c)
ஒரு ஊஞ்சல்
d)
ஓர் இலை
10.
"வானில் காகம் பறந்தது."
ஒருமை வாக்கியத்தைப் பன்மையாக்குக.
a)
வானில் காகம்கள் பறந்தது.
b)
வானில் காகங்கள் பறந்தது.
c)
வானில் காகம்கள் பறந்தன.
d)
வானில் காகங்கள் பறந்தன.
100 %
