Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தெரிவிடைக் கருத்தறிதல் குவிஸ்

Total questions: 5

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

மூதாட்டி எந்த நகரத்தை அடைந்தார்?

a)

கொடியூர்

b)

தலைநகரம்

c)

சிற்றூர்

d)

மதுரை

2.

மூதாட்டி எந்த இடத்தில் அரண்மனையைக் கண்டுபிடிக்க முடியவில்லை?

a)

மதுரை

b)

சிற்றூர்

c)

கொடியூர்

d)

தலைநகரம்

3.

மூதாட்டி எதற்காக அரசரைக் காண முடிவெடுத்தார்?

a)

அரசர் உதவி செய்வாரா என்று கண்டறிய

b)

தம் பிரச்சனையைத் தீர்க்க அரசர் உதவுவார் என்பதற்காக

c)

அரசரின் ஆட்சியில் குறையில்லை என்று கூறுவதற்காக

d)

பல இடங்களில் தண்ணீர் ஒழுகுவதைப்பற்றிக் கூற

4.

மூதாட்டியால் ஏன் அரண்மனையைக் கண்டுபிடிக்க முடியவில்லை

a)

அவருக்கு வழி தெரியாததால்

b)

பிறரைக் கேட்கத் தயங்கியதால்

c)

அரசர் தலைநகரத்தில் வாழாததால்

d)

நகரம் முழுதும் மாளிகைகள் இருந்ததால்

5-6.

ஒரு சிற்றூரில் ஏழை  மூதாட்டி ஒருவர் குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தார். அவர் வீட்டுக்கூரையில் ஓட்டைகள் நிரம்பியிருந்தன. எனவே, மழை பெய்யும் போதெல்லாம் பல இடங்களில் தண்ணீர் ஒழுகியது. இதனால், அவர் மிகவும் துன்பப்பட்டார். குடிசையைச்  சரிசெய்யப் பணம் இல்லாத அவர், என்ன செய்யலாம் என்று சிந்தித்தார். “கேட்டவருக்கெல்லாம் உதவி செய்வதாக அரசரைப் புகழ்கிறார்களே. அது உண்மை என்றால் அவரை நாடி உதவி கேட்பதில் தவறில்லை,” என்ற முடிவுக்கு வந்தார்.

 

பல நாள்கள் பயணம் செய்து தலைநகரத்தை அடைந்தார். அம்மூதாட்டி பார்க்கும் இடமெங்கும் மாளிகைகளும் கோபுரங்களுமாய்க் காட்சியளித்தன. மக்கள் எல்லோரும் செழிப்புடன் இருந்தார்கள். மூதாட்டியால் அரண்மனையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கிருந்தவர்களைக் கேட்கவும் அவருக்குத் தயக்கமாக இருந்தது. அப்போது அவர் கண்ணில் சிறிய வீடொன்று தென்பட்டது. அவ்வீட்டு வாயிலில் நின்று, “அம்மா!” என்று குரல் கொடுத்தார் அம்மூதாட்டி.

 

வெளியே வந்த பெண்மணி ஒருத்தி, “நீங்கள் யார்? எதற்காக இங்கு வந்தீர்கள்?” எனக் கேட்டாள். “நான் வெகு தொலைவிலிருந்து வருகிறேன். அரண்மனை எங்கே உள்ளது என்று கூற முடியுமா?” என்று கேட்டார் மூதாட்டி. அவரை வியப்புடன் பார்த்த அப்பெண்மணி, “இதுதான் அரண்மனை. இங்கேதான் அரசர் வாழ்கிறார்,” எனப் பதிலளித்தார். தன்னை அப்பெண்மணி கேலி செய்கிறார் என்று மூதாட்டி நினைத்தார். அந்நேரத்தில் எளிய உடை அணிந்த பெரியவர் ஒருவர் அவ்வீட்டிற்குள் வந்தார்.        “பாட்டி! இவர்தான் அரசர்,” என்று சுட்டிக்காட்டினார் அப்பெண்மணி.

மாட மாளிகை நிறைந்த இந்நகரத்தில் எளிய வீட்டில் மன நிறைவுடன் அரசர் குடியிருக்கிறார் என்றால் ஒழுகும் குடிசையில் என்னால் வாழ முடியாதா? என அம்மூதாட்டி யோசித்தார். அப்போது, “உங்களுக்கு என்ன குறை? எதுவாக இருந்தாலும் தயங்காமல் கூறுங்கள்,” என அரசர் கேட்டார். அதற்கு அம்மூதாட்டி, “அரசே தங்களைப் பார்த்துத் தங்கள் ஆட்சியில் மக்களுக்கு எக்குறையும் இல்லை என்று சொல்லத்தான் வந்தேன்,”

5.

பெண்மணி தன்னைக் கேலி செய்வதாக மூதாட்டி நினைக்கக் காரணம் என்ன?

a)

மூதாட்டி ஏழையாக இருந்ததால்   

b)

பெண்மணி அவரை வியப்புடன் பார்த்ததால்

c)

பெண்மணி அவரை நம்பவில்லை என்பதால்

d)

அரசர் அச்சிறிய வீட்டில் இருப்பதாகக் கூறியதால்

6.

மூதாட்டி அரசரிடம் ஏன் தம் வருகைக்கான உண்மை காரணத்தைக்  

கூறவில்லை?

a)

அரசர் ஏழையாகிவிட்டதால்

b)

அரசரைக் கண்டதும் தயக்கம் ஏற்பட்டதால்

c)

அரசரின் மனப்போக்கை பின்பற்ற விரும்பியதால்   

d)

அரசரின் மனத்தைப் புண்படுத்த விரும்பாததால்