wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விடுகதை 3

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

கீழே வரும் ஆனால் மேலே போகாது.அது என்ன?

a)

நத்தை

b)

மழை

c)

மூச்சு

d)

ஊசி

2.

அடி பாதை இருக்கும் கால் இருக்காது.அது என்ன?

a)

முத்திரை

b)

அமைதி

c)

நத்தை

d)

கடிகாரம்

3.

இளமையில் உயரம் முதுமையில் கட்டை.அது என்ன?

a)

மெழுகுவர்த்தி

b)

கடிகாரம்

c)

முத்திரை

d)

ஊசி

4.

மடிகளற்ற வீட்டில் எல்லா பொருட்களும் நீல நிறத்தில் இருக்கும்;அதன் படிகள் என்ன நிறத்தில் இருக்கும்.

a)

சிவப்பு

b)

நீலம்

c)

படிகள் இருக்காது

d)

பச்சை

5.

உலகம் முழுவதும் சுற்றும் ஆனால் ஒரே இடத்திலேயே இருக்கும்.அது என்ன?

a)

ஊசி

b)

முத்திரை

c)

காற்று

d)

சூரியன்

6.

ஒற்றைக் காதுக்காரன், ஓடி ஓடி வேலி அடைக்கிறான். அது என்ன?

a)

புயல்

b)

பனிக்கட்டி

c)

ஊசி

d)

வானம்

7.

பார்த்தால் கல்; பல் பட்டால் நீர். அது என்ன?

a)

ஊசி

b)

புயல்

c)

வானம்

d)

பனிக்கட்டி

8.

திரி இல்லாத விளக்கு; உலகம் எல்லாம் தெரியும். அது என்ன?

a)

வாழை

b)

அகப்பை

c)

சொந்தம்

d)

சூரியன்

9.

மட்டை உண்டு, கட்டை இல்லை; பூ உண்டு, மணமில்லை. அது என்ன?

a)

வாழை

b)

சூரியன்

c)

பனிக்கட்டி

d)

முள்

10.

பிடி இல்லாத குடையைத் தொட முடியவில்லை. அது என்ன?

a)

பனிக்கட்டி

b)

வானம்

c)

நட்சத்திரம்,

d)

வாழை

11.

கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள். அவள் யார்?

a)

மின்விளக்கு

b)

மெழுகுவர்த்தி

c)

வெங்காயம்

12.

தலையில் கீரிடம் வைத்த தங்கப்பழம். அஃது என்ன?

a)

ஆரஞ்சு

b)

டுரியான்

c)

அன்னாசி

13.

உயரத்தில் இருப்பிடம். தாகம் தீர்ப்பதில் தனியிடம். அஃது என்ன?

a)

மழை

b)

இளநீர்

c)

மேகம்

14.

நன்றிக்கு வால். கோபத்துக்கு வாய். அஃது என்ன?

a)

நல்லவர்

b)

பூனை

c)

நாய்

15.

பிடுங்கலாம். ஆனால் நட முடியாது?

a)

புல்

b)

முடி

c)

செடி

16.

காற்றைக் குடித்துக் காற்றில் பறப்பான். அவன் யார்?

a)

பட்டம்

b)

காகிதம்

c)

ஊதற்பந்து

17.

தலையைச் சீவினால் தாளில் நடப்பான். அவன் யார்?

a)

கத்தி

b)

பென்சில்

c)

இளநீர்

18.

முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும். அஃது என்ன?

a)

ஆமை

b)

கழுதை

c)

முதலை

19.

பற்கள் இருக்கும். ஆனால் கடிக்க மாட்டான். அவன் யார்?

a)

எலி

b)

மீன்

c)

சீப்பு

20.

ஐந்து வீட்டிற்கு ஒரு முற்றம். அஃது என்ன?

a)

தென்னை

b)

கை

c)

அண்டை வீடு

21.

முறையின்றித் தொட்டால், ஒட்டிக் கொண்டு உயிர் எடுப்பான். அவன் யார்?

a)

சிங்கம்

b)

மின்சாரம்

c)

நீர்

22.

வளைஞ்சி நெளிஞ்சி ஆடும். தண்ணீர் குடித்தால் சாகும். அஃது என்ன?

a)

குரங்க

b)

மரம்

c)

தீ

23.

அடிக்காமல், திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள். அவள் யார்?

a)

கோபம்

b)

வெங்காயம்

c)

புலி

24.

வீட்டில் இருப்பான் காவலாளி. வெளியே சுற்றுவான் அவன் கூட்டாளி. அவர்கள் யார்?

a)

செருப்பும் காலணியும்

b)

நாயும் பூனையும்

c)

சாவியும் பூட்டும்

25.

மண்ணுக்குள் இருக்கும் மங்கைக்கு அழகு தரும். அஃது என்ன?

a)

தக்காளி

b)

மஞ்சள்

c)

வெங்காயம்