wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விடுகதை 2

Total questions: 20

Worksheet time: 8mins

Name
Class
Date
1.
தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
a)
மீன் வலை
b)
கரண்டி
c)
கடல்
d)
ஓட்டை
2.
முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கைத் தேவை?
a)
ஆபத்து
b)
பயம்
c)
ஆறுதல்
d)
கஷ்டம்
3.
முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை. கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்? இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும் அதுவே. முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண். மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?
a)
கனி
b)
கவிதை
c)
கண்மணி
d)
பார்வை
4.
பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?
a)
முட்டை
b)
மீன்
c)
கடல்
d)
கண்கள்
5.
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
a)
சூரியன்
b)
நிலா
c)
பூமி
d)
சக்தி
6.
ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
a)
மூச்சு
b)
கடவுள்
c)
மனிதன்
d)
குரங்கு
7.
நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில் பெண்கள் விருப்பம், அது என்ன?
a)
பட்டு
b)
நகை
c)
ஆபரணம்
d)
புடவை
8.
கடையெழுத்து மாறிடில் தின்னலாம், முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும், மொத்தத்தில் முருகன் இடம், தெரிந்தவர் சொல்லுங்கள் இங்கே?
a)
பழனி
b)
கனி
c)
பழம்
d)
காசி
9.
கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள் காஞ்சியில் நான் யார்?
a)
துணி
b)
ஆடை
c)
பட்டுத்துணி
d)
அணிகலன்
10.
அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
a)
அரிசி
b)
நெல்
c)
சோறு
d)
நீர்
11.

மண்ணுகுளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார்

a)

கிழங்கு

b)

நீர்

c)

மஞ்சள்

d)

கச்சான்

12.

தொப்பி போட்ட காவல்காரன், உரசி விட்டால் சாம்பல் ஆவான்.

a)

தீக்குச்சி

b)

தீப்பந்தம்

c)

தீப்பொரி

d)

தீபம்

13.

ஏழு குதிரை பூட்டிய தேரில் வரும் மன்னவன்.

a)

சந்திரன்

b)

சூரியன்

c)

நிலவு

d)

திங்கள்

14.

உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?

a)

உடல்

b)

பொம்மை

c)

வெங்காயம்

d)

மனிதன்

15.

சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?

a)

கண்

b)

காது

c)

மூக்கு

d)

பல்

16.

வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?

a)

வெங்காயம்

b)

முட்டை

c)

சோளம்

d)

சூரியகாந்தி

17.

பூ பூக்கும். காய் காய்க்கும். ஆனால் பழம் பழுக்காது. அது என்ன?

a)

பூசனிக்காய்

b)

மாங்காய்

c)

தேங்காய்

d)

கத்தரிக்காய்

18.

கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன?

a)

நீர்

b)

கனவு

c)

காற்று

d)

நிழல்

19.

காற்றைக் குடித்து காற்றில் பறப்பான், அவன் யார்?

a)

பட்டம்

b)

விமானம்

c)

பலூன்

d)

கடிதம்

20.

ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன?

a)

தண்ணீர்

b)

பண்ணீர்

c)

கண்ணீர்

d)

வெண்ணீர்