Worksheetsவிடுகதை 4
Total questions: 30
Worksheet time: 3600secs
உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?
மனிதன்
சட்டி
அகப்பை
நாய்
வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை, கிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும் இல்லை, வலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை – அவன் யார்?
நூல்
பட்டாம்பூச்சி
பட்டுப்புழு
சிலந்தி
ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிறவிகள் வெட்டிப்போடுவதில் கெட்டிக்காரர்கள்.
அது என்ன?
கத்திரிக்கோல்
கத்தி
தோழன்
பகைவர்
ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
குரங்கு
மூச்சு
கடவுள்
மனிதன்
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
சக்தி
சூரியன்
நிலா
பூமி
ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்?
விளக்கு
துடைப்பம்
பேனா
பாத்திரம்
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
பலா
மா
வாழை
தோடை
எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன?
மீன்
நண்டு
சிலந்தி
வாத்து
ஆயிரம் தச்சன் கூடி செய்த அழகான மண்டபம் ஒருவர் கண் பட்டு உடைந்ததாம். அது என்ன?
குருவிக் கூடு
கல்
பறவை கூடு
தேன் கூடு
உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?
வெங்காயம்
வாழைப்பூ
பூண்டு
மலர்
மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல, அது என்ன?
வேர்
விழுது
கிளை
பழம்
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
மின்சாரம்
மழை
பட்டாசு
தீ
கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ?
நண்டு
மீன்
சீனி
உப்பு
ஓய்வு எடுக்காமல் இயங்கும். ஓய்வு எடுத்துவிட்டால் மறுபடியும் இயங்காது. அது என்ன?
கண்
இதயம்
சூரியன்
நிலா
அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன?
காற்று
நீர்
மண்
நிலக்கரி
தாழ்ப்பாள் இல்லாத கதவு, தானாக மூடி திறக்கும் கதவு அது என்ன?
ஜன்னல்
வாய்
காது
கண் இமை
பக்கத்திலுள்ள பட்டணத்தைப் பார்க்க முடியவில்லை - அது என்ன?
கால்
கை
முதுகு
வாய்
அடித்து நொறுக்கி அணலில் போட்டால் ஆவியாகத் தோன்றி அழகாய் மணக்கும். அது என்ன?
சாம்பிராணி
நெருப்பு
புகை
ஊதுபத்தி
கழுத்து உண்டு, தலையில்லை; உடல் உண்டு, உயிர் இல்லை, கையுண்டு, விரல் இல்லை. அது என்ன?
ஆவி
சட்டை
நண்டு
பாவாடை
மரக் கிளையே தலையில் இருந்தாலும்
மனம் கலங்கித் திரிவான் காட்டுக்குள்.
அவன் யார்?
புலி
யானை
காண்டாமிருகம்
மான்
அழிக்கும் பணி கொண்ட இவனுக்கு
பள்ளிப் படிப்பில் தனியிடம் உண்டு-
அது என்ன?
பேனா
புத்தகப்பை
ரப்பர்
புத்தகம்
சாத்திய கதவிருக்க, ஏற்றிய விளக்கிருக்க,
இரவில் வந்தது யார்? இரத்தத்தைக்
குடித்தது யார்?
திருடன்
கொசு
ஈ
எறும்பு
வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப்படம் – அது என்ன?
சினிமா
நாடகம்
மழை
கனவு
கையளவு உடம்புக்காரன், காவலுக்கு கெட்டிக்காரன் – அவன் யார்?
காவல்காரன்
பூட்டு
சாவி
காவல் அதிகாரி
அண்டை வீட்டில் குடியிருப்போம் அக்காள் தங்கை நாங்கள்; கிட்டகிட்ட இருந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டோம் - அது என்ன?
கைகள்
கால்கள்
காதுகள்
கண்கள்
கருப்பன் தண்ணீரில் குளித்து வெள்ளையனாவான், வெள்ளையன் பிறகு விருந்தாவான் – அவன் யார்?
இறால்
உளுத்தம் பருப்பு
சீனி
உப்பு
அரைசாண் மனிதனுக்கு வயிறு நிறைய முட்டை - அவன் யார்?
மிளகாய்
தக்காளி பழம்
மாம்பழம்
வெண்டைக்காய்
கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை, வாங்கியவனும் உபயோகிக்கவில்லை, உபயோகிப்பவனுக்கு அதனைப் பற்றி எதுவும் தெரியாது அது என்ன?
புத்தகம்
அலமாரி
மிதிவண்டி
சவப்பெட்டி
தாளைக் கொடுத்தால் தின்னும்; தண்ணீர் குடித்தால் மடியும் - அது என்ன?
நெருப்பு
நீர்
இயந்திரம்
புகை
வண்ணான் வெளுக்காத வெள்ளை, குயவன் பண்ணாத பாண்டம், மழை பெய்யாத தண்ணீர் - அது என்ன?
பானை
தேங்காய்
சட்டி
காகிதம்
