wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி வேறுபாடு 1 2025

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பாரதியார் பல நீதி புகட்டும் பாடல்களைப் பாடியுள்ளார்.  அதன் வாயிலாக அவர் மாணவர்களுக்குப் பல ______________  கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார்.

a)

அரிய

b)

அறிய

2.

சிங்கப்பூரில் இப்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பொருட்களின் ______________ ப‎லமடங்கு  ஏறியுள்ளது. ‏இ‏தைச் சமாளிக்க நம் அரசாங்கம் பல வழிமுறைகளை யோசிக்கின்றது.

a)

விளை

b)

விலை

3.

தமிழ் இலக்கியத்தில் கவிஞர் கண்ணதாசன் பல ______________ பாடல்களை எழுதியுள்ளார். இதனால் அவர் தமிழ் மக்களின் மனதில் இடம் பெற்றுள்ளார்.

a)

அரிய

b)

அறிய

4.

இயற்கை ______________ கெடாமல் இருக்க சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை நாம் எடுக்கவேண்டும்.

a)

வலம்

b)

வளம்

5.

பொதுவாக, மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்காக ______________ முறையாக படிக்க வேண்டும்.

a)

சீறான

b)

சீரான

6.

நா‎ங்கள் நேற்றுப் பறவைப் பூங்காவுக்குச் சென்றோம். அங்கு ஒரு பறவை தனது  _____________ பழங்களைக் கொத்திச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

a)

அழகால்

b)

அலகால்

7.

தேசிய தினத்தன்று எங்கும் கொண்டாட்டமாக இருக்கும். அன்று  _____________ வேடிக்கைகள், கோலாகலமாக இடம்பெறும்.

a)

வான

b)

வாண

8.

ராமன்  காட்டில், வழி தெரியாமல் அலைந்துகொண்டிருந்தான். அப்போது பாதையைக் கவனிக்காமல் ஆழமான ____________ ஒன்றில் விழுந்தான். 

a)

குழி

b)

குளி

9.

அன்று ராமுவின் பிறந்தநாள். அத்தை அவனுக்குப் பிடித்த 

      நண்டு _______________ சமைத்தார்.

a)

குளம்பு

b)

குழம்பு

10.

என் தாயார் கடையிலிருந்து பழங்கள் வாங்கி வந்தார். வீடு    

     திரும்பியதும், அவர் அவற்றை _______________ என்னிடம்

     சாப்பிடக் கொடுத்தார்.        

a)

அரிந்து

b)

அறிந்து

11.

காவலர்கள் திருடனைத் தூரத்தில் கண்டனர். அவர்கள் ஒரு

      _______________ கூடத் தாமதிக்காமல் அவனைத் துரத்திப்

      பிடித்தனர்.  

 

a)

கனம்

b)

கணம்

12.

வெயில் கடுமையாக இருந்தது. அதனால் ஓட்டப் பந்தயம் முடிந்ததும்

     பயிற்றுவிப்பாளர் பவானியிடம், “தண்ணீர் குடித்து உன் தாகத்தை _________,”   

     என்றார்.

 

a)

தனி

b)

தணி

13.

திரு ராமலிங்கம் தான் பழகும் அனைவரிடத்திலும் _________ கண்டு கொண்டிருந்தார்.  அதனால், அவருக்குக் குறைவான நண்பர்களே இருந்தனர்.

a)

குறை

b)

குரை

14.

சிங்கப்பூர் _________ மிக்க நாடாகத் திகழ்கிறது.  இதற்கு நம் முற்போக்குமிக்க தலைவர்களும் விடாமுயற்சியுடன் செயல்படும் மக்களுமே காரணமாவார்கள்.

a)

வலம்

b)

வளம்

15.

தமிழ் எழுத்தாளர் _________ கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்தியது.

     அதில் நிறையப் பள்ளிகள் கலந்து கொண்டன.

a)

கலகம்

b)

கழகம்

16.

மழை பெய்யும் போது, நிலத்தில் உள்ள ____________ நீர் தேங்கும்.

a)

குலத்தில்

b)

குளத்தில்

17.

சமையலுக்கு தேவையான பொருட்களை அம்மா ____________ குறைத்து வாங்கினார்,

a)

விளை

b)

விலை

18.

திரு பாரதி தம்மால் முடிந்த உதவிகளை ஏழை எளியோருக்குச் செய்தார்.  அவரது _________________ பணியைப் பாராட்ட, அவருக்கு விருது வழங்கப்பட்டது.

   

a)

சீறிய

b)

சீரிய

19.

அந்தப் பழைய கட்டடத்தில் மின்சாரக் கோளாறினால் தீ மூண்டது. அங்கிருந்த குடியிருப்பாளர்கள், உடனே தீயை ________________ விட்டனர்.

a)

அனைத்து

b)

அணைத்து

20.

பாட்டி பால் பாயசம் செய்ய எண்ணினார். அதற்கு வேண்டிய _________________ அவர் கடையிலிருந்து வாங்கி வந்தார்.

a)

வெள்ளத்தை

b)

வெல்லத்தை