wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

முற்றியலுகரம்

Total questions: 10

Worksheet time: 50secs

Name
Class
Date
1.

எல்லா உகரங்களும் (கு,சு,டு,து,பு,று,ஙு,ஞு,ணு,நு,மு,னு,யு,ரு,லு,வு,ழு,ளு) தனித்து ___________ ஒலிக்கும் போது முற்றியலுகரங்களாகும்.

a)

குறைவாக

b)

பாதியாக

c)

முழுமையாக

d)

நீண்டு

2.

தனிக்குறிலை அடுத்து வருகின்ற ________ உகரம் முற்றியலுகரமாகும்.

a)

மெல்லின

b)

வல்லின

c)

இடையின

3.

சொல்லின் ________ வருகின்ற மெல்லின, இடையின உகரங்கள் முற்றியலுகரங்களாகும்.

a)

முதலில்

b)

இடையில்

c)

இறுதியில்

d)

நடுவில்

4.

சொல்லின் முதல் எழுத்தாக வரும் உகரம்  முற்றியலுகரமாகும்.

இதற்கான சரியான சான்றைத் தெரிவு செய்க.

a)

உலகம்

b)

தாழ்வு 

c)

பொது

d)

விழு

5.

பின்வரும் சொற்களில் எது முற்றியலுகரமாகும்?

a)

அழகு

b)

இங்கு

c)

பாட்டு

d)

இரவு

6.

பின்வருவனவற்றுள் எது முற்றியலுகரம் அல்ல?

a)

துள்ளு

b)

உருவம்

c)

பளு

d)

காசு

7.

அப்பா பதிவு அஞ்சல்வழி பல முக்கியமான ஆவணங்களை வழக்கறிஞருக்கு அனுப்பினார்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் குற்றியலுகர்ச் சொல் எது?

a)

அப்பா

b)

பதிவு

c)

அஞ்சல்வழி

d)

ஆவணங்களை

8.

பின்வரும் வாக்கியத்தில் முற்றியலுகரச் சொல்லைத் தெரிவு செய்க.

பசு மாடு பால் கொடுத்தது.

a)

பசு

b)

மாடு

c)

பால்

d)

கொடுத்தது

9.

கோடிடப்பட்டுள்ள இடத்திற்குச் சரியான முற்றியலுகரச் சொல்லைத் தெரிவு செய்க.

அழகன் _______ ஏற்பட்ட புண்ணைக் குணப்படுத்த மருத்துவரை நாடினான்.

a)

கையில்

b)

காலில்

c)

குடலில்

d)

வயிற்றில்

10.

சரியான முற்றியலுகரச் சொற்களைத் தெரிவு செய்க.

a)

எது, எரு, ஏடு

b)

குடம், புலவு, முடி

c)

அறிவு, அழகு, அன்று

d)

நாக்கு, மூக்கு, பாக்கு