wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருஅருட்பா - செய்யுள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இராமலிங்கம் எனும் இயற்பெயர் கொண்ட திரு அருட்பிரகாச வள்ளலார் 'மருதூர்' என்ற ஊரில் பிறந்தார்.

a)

சரி

b)

பிழை

2.

இச்செய்யுள் வரியில் 'களிப்பு' எனும் சொல்லின் பொருள் யாது?

a)

சோகம்

b)

உறுது

c)

மகிழ்ச்சி

d)

கோபம்

3.

கீழ்க்காணும் செய்யுள் வரியைப் நிறைவுச் செய்க.

காணார்க்கும் '-​---------------' ​கண்ணளிக்கும் '-​---------------' .​ ​ ​ ​ ​

a)

மதியார்க்கும் & மதியே

b)

மாட்டார்க்கும் & வரமே

c)

சுரர்களுக்கும் & நலமே

d)

கண்டவர்க்கும் &
கண்ணே

4.

'வல்லார்க்கும்' & 'மாட்டார்க்கும்' எனும் சொல்லின் பொருளைச் தெரிவுச் செய்க.

a)

நல்லவர் & கெட்டவர்

b)

வலிமையுள்ளவர் & வலிமையற்றவர்

c)

மனிதர் & தேவர்

d)

கற்றவர் & கல்லாதவர்

5.

இச்செய்யுள் வரி, தன்னை உணர்ந்து மதிப்பவர்களுக்கு மட்டுமே அறிவைத் தருகிறார் கடவுள் எனும் கருத்தை உணர்த்துகிறது.

a)

சரி

b)

பிழை

6.

திரு அருட்பாவில் வள்ளல் பெருமானார் இயற்றிய இச்செய்யுள் வரிகள் இறைவன் குறித்து உணர்த்தும் 2 முக்கிய கருத்துகள் யாவன?

a)

தேவர்களுக்கு மட்டும் அனைத்து இன்பங்களையும்

நல்கும் நலச்சுடர்.

b)

அறிவையும் ஆனந்தத்தையும் நலன்களையும் பேதமின்றி பங்கிடும் ஞானச் செல்வர்.

c)

அனைத்து உயிர்களுக்கும் ஒப்பற்ற அருட்கருணை

வழங்கும் பரம்பொருள்.

d)

எங்கும் உறையும், அருள்மிகு

நடுநிலையற்ற தன்மையுடையவர்.

7.

இச்செய்யுள் வரியின் பொருளைத் தேர்ந்தெடுக.

a)

நல்லவர், கெட்டவர் என்ற வேறுபாடு காட்டாமல் அனைவருக்கும் நடுநிலையில் நின்று அருள் புரிபவன் இறைவன்.

b)

தன்னை உணர்ந்தவர்களுக்கும் உணராதவர்களுக்கும் வேறுபாடின்றி அகக்கண்களைக் கொடுக்கின்ற அருட்கண்னாளன் இறைவன்.

c)

மனிதன், தேவர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லார்க்கும் நல்லதைத் தருகின்ற கருணையாளன் இறைவன்.

d)

கற்றவர், கல்லாதவர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லார்க்கும் இன்பத்தைத் தருகின்ற பேரின்பமானவன் இறைவன்.

8.

இப்படம் உணர்த்தும் செய்யுள் வரியை அடையாளங்காண்க.

a)

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

b)

நரர்களுக்கும் சுரர்களுக்கும்

நலங்கொடுக்கும் நலமே

c)

வல்லார்க்கும் மாட்டார்க்கும்

வரம்அளிக்கும் வரமே

d)

மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே

9.

கீழ்க்காண்பனவற்றுள், 'இறைவன்' எத்தகையை சிறப்புகளை ஒருங்கேயுடையவராகப் போற்றப்படுகிறார்?
(3 விடைகளை உள்ளிடலாம்)

a)

ஒப்பற்ற அருட்கருணை கொண்டவர்

b)

அனைத்து உயிர்களிடத்திலும் உறைந்துள்ளார்

c)

அறிவையும் ஆனந்தத்தையும் நலன்களையும் பேதமின்றி வழங்குவார்

d)

பகைமை கொண்டு பழிவாங்கும் குணம் கொண்டவர்.

10.

'தன்னை உணர்ந்தவர்களுக்கும் உணராதவர்களுக்கும் வேறுபாடின்றி அகக்கண்களைக் கொடுக்கின்ற அருட்கண்னாளன் இறைவன்'
எனும் பொருளை உணர்த்தும் செய்யுள் வரியைத் தெரிவுச் செய்க.

a)

b)

c)

d)