wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கதை தெரியுமா?

Total questions: 8

Worksheet time: 8mins

Name
Class
Date
1.
ஓர் ஊரில் பணக்காரன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு வீடு கட்டினான்.  வீட்டைக் கட்டி முடிக்க பத்து வருடங்கள் பிடித்தன. கிரகப்பிரவேசத்திற்கு நல்ல நாள் பார்த்து அந்த வீட்டில் குடியேறினான். அந்த வீட்டில் நள்ளிரவு தோறும் ஒரு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. அது “விழுந்து விடவா? விழுந்து விடவா?” என்ற சத்தம் ஆகும். பணக்காரன் பயத்தில் நடு நடுங்கினான். “புது வீட்டிற்கு வந்தது நம்முடைய உயிருக்கே ஆபத்தாய் முடியும் போலிருக்கிறது. வீடு விழுந்தால் நம்முடைய மனைவியும் குழந்தைகளும் மாண்டு விடுவார்களே! என்று அஞ்சி, முன்பு குடியிருந்த வீட்டிற்கே போய்ச் சேர்ந்தான். 
1. பணக்காரன் ஏன் அஞ்சினான்?
a)
வீடு விழுந்தால் தனக்கு வசிக்க இடம் இல்லை என்பதால்  
b)
வீடு விழுந்தால் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டது வீணாகும் என்பதால்     
c)
வீடு விழுந்தால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் 
d)
வீடு விழுந்தால் அவனுடன் அவனுடைய மனைவியும் குழந்தைகளும் இறந்து போவார்கள் என்பதால்
2.
புது வீடு காலியாகக் கிடந்தது. வீடு கட்டிக் குடிபோனவன் மறுபடியும் பழைய வீட்டிற்கே வந்து விடவே, அது பேய் வசிக்கும் வீடென்று வதந்தி பரவியது. அதனால், யாருமே அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொள்ள முன்வரவில்லை.
2. அந்த வீட்டை யாரும் வாடகைக்கு எடுத்துக்கொள்ள முன்வராததற்குக் காரணம் என்ன?
a)
ராசி இல்லாத வீடு என்று ஊரார் எண்ணியதால்
b)
பணக்காரன் வீட்டை யாருக்கும் வாடகைக்கு விடாததால்
c)
வீட்டில் பேய் இருப்பதாக வதந்தி பரவியதால்
d)
வீட்டில் வசதி இல்லாததால்
3.
அந்த ஊரில் பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருந்தனர். அவன் தங்குவதற்கு இடமின்றி இருந்தனர். மழைக்காலமாக இருந்ததால், அவன் தவித்துப்போய் அந்தப் பணக்காரனிடம், “உங்கள் வீட்டை எனக்கு வாடகைக்குக் கொடுப்பீர்களா? என் சக்திக்கு முடிந்ததை மாதாமாதம் தருகிறேன்,” என்று கேட்டான். வீடு பாழடைந்து கிடக்காமல் இருந்தால் போதும் என்ற எண்ணத்துடன், “வாடகை கூட கொடுக்க வேண்டாம், உன் சௌகரியப்படி இரு,” என்றான் பணக்காரன்.
3. பணக்காரன் பிச்சைக்காரனிடம் வீட்டை எதற்கு வாடகைக்குக் கொடுத்தார்?
a)
பிச்சைக்காரன் தன் குடும்பத்தோடு துன்பப்படுவதால்
b)
வீடு பாழடைந்து கிடக்காமல் இருப்பதற்காக
c)
அவனுக்கு உதவி செய்ய எண்ணியதால்
d)
வாடகை கிடைக்கும் என்பதால்
4.
பிச்சைக்காரன் அந்த வீட்டில் குடியேறினான். ஒவ்வொரு நள்ளிரவிலும், “விழுந்து விடவா?” என்ற சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. பிச்சைக்காரன் வாழ்க்கையில் வெறுப்படைந்தவனாக இருந்ததால், “நாமே வெகு ஏழையாக இருக்கிறோம். இந்த வீடு நம்முடைய தலையில் விழுந்தால் நம் கஷ்டமும் ஒரேயடியாகத் தீர்ந்து விடும்,” என்று எண்ணி “விழு!” என்றான். உடனே மழை பொழிவதைப் போல் பொற்காசுகள் பொழிந்தன.
4. 
வீட்டில் எப்போது பொற்காசுகள் பொழிந்தன?
a)
பணக்காரன் வீட்டைவிட்டு போகும் போது
b)
பிச்சைக்காரன் வீட்டில் குடியேறிய போது
c)
பிச்சைக்காரன் ‘விழு’ என்று கூறிய போது
d)
பிச்சைக்காரன் வாழ்க்கையில் வெறுப்படைந்த போது
5.
அவற்றைக் கண்ணுற்ற பிச்சைக்காரனுக்கு ஆனந்தம் எல்லை கடந்தது. பிச்சைக்காரன் தம்முடைய தரித்திரம் விடிந்தது என்று எண்ணி குதுகலமடைந்தான். அவன் பொற்காசுகளை எல்லாம் ஓரமாகக் குவித்து வைத்தான். சிறிது சிறிதாக அவற்றை மாற்றி புடவை, நகை, வீடு, வாசல் என்று அவ்வப்போது வாங்கிக் கொண்டு அந்த வீட்டிலேயே குடியிருந்தான். 
5. பிச்சைக்காரன் ‘நம்முடைய தரித்திரம் விடிந்தது’ என்று ஏன்  கூறினான்? 
a)
இனிமேல் இன்னல் பட தேவையில்லாததால்
b)
இனிமேல் தங்குவதற்கு இடம் தேவையில்லாததால்
c)
இனிமேல் வாழ்க்கையில் வெறுப்படைய தேவையில்லாததால்
d)
இனிமேல் உயிருக்கு ஆபத்து இல்லாததால்
6.
6. மாண்டு
a)
காயமடைந்து
b)
இறந்து
c)
நொந்து
d)
கவலையடைந்து
7.
7. கஷ்டமும்
a)
துன்பமும்
b)
வெட்கமும்
c)
வேடிக்கையும்
d)
கொடுமையும்
8.
8. விடிந்தது
a)
முடிந்தது
b)
பகலானது
c)
தீர்ந்தது
d)
ஆரம்பித்தது