wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ்காணும் சூழல்களில் எது அள்ளி இறைத்தல் என்ற மரபுத்தொடருக்குப் பொருந்தி வரவில்லை?

a)

குமரன் கோழிகளுக்குத் தீனியை அள்ளி இறைத்ததால் அவனது அப்பா அவனைக் கண்டித்தார்.

b)

மாலா தேவையற்றப் பொருள்களை வாங்கி பணத்தை அள்ளி இறைத்ததால் இன்று சிரமப்படுகிறாள்.

c)

குவளையைத் தம்பி தான் உடைத்ததாக தீபன் அம்மாவிடம் அள்ளி இறைத்தான்.

2.

ராதா குமரனின் புத்தகத்தைத் திருடிவெட்டு அள்ளி இறைத்ததால் ஆசிரியர் அவளுக்குத் தண்டனை வழங்கினார்.

a)

சரி

b)

தவறு

3.

கீழ்காணும் மரபுத்தொடர்களில் எது நற்செயலைக் குறிக்கிறது?

a)

கண்ணும் கருத்தும்

b)

கம்பி நீட்டுதல்

c)

ஓட்டை வாய்

d)

அள்ளி இறைத்தல்

4.

இப்படம் உணர்த்தும் மரபுத்தொடர் எது?

a)

கம்பி நீட்டுதல்

b)

ஓட்டை வாய்

c)

கிணற்றுத் தவளை

d)

அவசரக் குடுக்கை

5.

அள்ளி விடுதல் என்பதின் பொருள் என்ன?

a)

பிறருடைய கவனத்திலிருந்து தப்பித்துப் போய்விடுதல்

b)

பொருட்களை எடுத்து கீழே இறைத்தல்

c)

அளவுக்கு மேல் செலவழித்தல்

d)

ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்

6.

படம் உணர்த்தும் மரபுத்தொடர் எது?

a)

கண்ணும் கருத்தும்

b)

அள்ளி இறைத்தல்

c)

அள்ளி விடுதல்

d)

செவி சாய்த்தல்

7.

வெகு நாட்களாகக் காவல் துறையினருக்குக் கம்பி நீட்டி வந்த திருடன் நேற்று பிடிப்பட்டான்.

a)

சரி

b)

தவறு

8.

திலகா தவறுதலாக கீழே விழுந்ததை ராமன் மிகைப்படுத்தி ஆசிரியரிடம் கூறியது திலகாவிற்குக் கோபம் ஏற்பட்டது. ராமனின் இச்செயல் எந்த மரபுத்தொடருக்குப் பொருந்தி வருகிறது?

a)

அள்ளி விடுதல்

b)

அள்ளி இறைத்தல்

c)

கம்பி நீட்டுதல்

d)

கிணற்றுத் தவளை

9.

படம் உணர்த்தும் மரபுத்தொடர் எது?

a)

முழு மூச்சு

b)

கண்ணும் பென்சிலும்

c)

கண்ணும் கருத்தும்

d)

காணும் தாள்

10.

கீழே உள்ள விடைகளில் எது அள்ளி விடுவதனால் ஏற்படும் விளைவு அல்ல?

a)

மரியாதைக் கிடைக்காது

b)

தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும்

c)

போற்றப்படுதல்

d)

நம்பிக்கையின்மை