Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை உருபுகள்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சந்தோசம் சந்தோசம் வாழ்கையின் பாதி பலம்

சந்தோசம் இல்லை என்றால் மனிதற்கு ஏது பலம்

புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு

எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு


மேற்காணும் பாடல் வரிகளில் எந்தச் சொல் ஏழாம் வேற்றுமை உருபினைக் குறிக்கின்றது?

a)

வாழ்க்கையின்

b)

கொண்டால்

c)

மண்ணில்

d)

மழை

2.

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா?

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா?

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..

அதில் அர்த்தம் உள்ளது.


நாம் இன்று படித்த எத்தனையாவது வேற்றுமை உருபு இந்தப் பாடலில் தென்படுகிறது?

a)

ஏழாம் வேற்றுமை உருபு

b)

எட்டாம் வேற்றுமை உருபு

c)

ஐந்தாம் வேற்றுமை உருபு

d)

ஆறாம் வேற்றுமை உருபு

3.

இறைவா இறைவா…

—

முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்

முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன்

என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன்

ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன்


எந்தச் சொல் எட்டாம் வேற்றுமை உருபைக் குறிக்கின்றத்து?

a)

மாட்டேன்

b)

என்னை

c)

இறைவா

d)

ஏணியாய்

4.

இதில் எது ஏழாம் வேற்றுமைக்குக் கீழடங்காது?

a)

இல்

b)

இடம்

c)

பால்

d)

அது

5.

எட்டாம் வேற்றுமை உருபைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

கந்தா, எங்கே ஓடுகிறாய்?

b)

அம்மா காய்கறிகளை வாங்குகிறார்.

c)

ஏன் நீ பள்ளிக்கு வரவில்லை

d)

நான் மிட்டாய்கள், புத்தகங்கள், பென்சில்கள் ஆகியவை வாங்கி வந்தேன்.