Worksheetsபயிற்சி
Total questions: 10
Worksheet time: 5mins
1. கீழ்க்காண்பவை……….ஆகும்
- செய்தான்
- ஓடினான்
A . பகுபதம்
B. பகாப்பதம்
C. அகவினா
D. புறவினா
2. பகாப்பத்தைத் தெரிவு செய்க
A. நட
B. தீயணைப்பு
C. படித்தான்
D. பறந்தன
3. கோடிடப்பட்டுள்ள சொற்களின் வகையைத் தெரிவு செய்க.
‘ தேவி பூக்களை பறித்துக் கொண்டு நடந்து சென்றாள்.’
A. சுட்டு-பகுப்பதம்
B. பகுப்பதம் - பகாப்பதம்
C. அகவினா - புறவினா
D.பகாப்பதம் - பகுபதம்
4. கீழ்க்காணும் விதிக்கேற்ற சரியான விடையைத் தெரிவு செய்க.
‘இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகாது’
A. என் வீடு
B. பழம் உண்டான்
C. மரக்கிளை
D. கூலி வேலை
5. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளுக்கேற்ற சொல்லிலக்கண வகையைத் தெரிவு செய்க.
- ஒரு சொல்லின் வேர்ச்சொல் , சொல்லின் பகுதியாகும்.
- சொல்லின் இறுதியில் இருப்பது, விகுதி.
A. பெயர்ச்சொல்
B. திரிச்சொல்
C.பகுபதம்
D. பகாப்பதம்
6. கீழ்க்காணும் சொற்கள் உணர்த்தும் சரியான இலக்கண விதியைத் தெரிவு செய்க.
- தாய் தந்தை
- நீ நான்
A. வேற்றுமைத்தொகையில் வலிமிகாது
B. உம்மைத்தொகையில் வலிமிகாது
C. ஆறாம் வேற்றுமத்தொகையில் வலிமிகாது
D. வினைத்தொகையில் வலிமிகாது
7. கீழ்க்காணபவற்றுள் எது இரண்டாம் வேற்றுமைத்தொகை அல்ல?
A. பழம் வாங்கினான்
B. விறகு கட்டினான்
C. மணி ஓசை
D. துணி மடித்தாள்
8. கீழ்க்காணும் கூற்றில் கோடிடப்பட்டுள்ள சொற்றொடரில் ஏன் வலிமிகவில்லை?
“என் வீடு தாமான் ஜயாவில் உள்ளது”
A. எழுவாய்த் தொடர் என்பதால்
B. ஓரெழுத்து ஒருமொழி சொல் என்பதால்
C. அஃறிணை பெயர் என்பதால்
D. ஆறாம் வேற்றுமைத்தொகை என்பதால்
9. கீழ்க்காணபவற்றுள் எது உம்மைத்தொகை?
A. மலை மடு
B. துணி கட்டு
C. வா போ
D. ராமு சாப்பிட்டான்
10. பகாப்பதம் என்றால் என்ன?
A. வேர்ச்சொல்
B. பகுதி
C. விகாரம்
D. பிரிக்க முடியும் சொல்
