Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆகுபெயர்

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

1. பின்வருவனவற்றுள் காலவாகு பெயரை ஏற்று வந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

மயில் ஆடினாள்

b)

ஊர் சிரித்தது

c)

இனிப்பு உண்டான்

d)

சித்திரை வந்தாள்

2.

கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க,

a)

தாமரை மலர்ந்தது - காலவாகு பெயர்

b)

மலேசியா வியந்தது - இடவாகு பெயர்

c)

இனிப்பு உண்டான் - பொருளாகு பெயர்

d)

பொங்கல் வைத்தார் - பண்பாகு பெயர்

3.

இவற்றுள் எவை தொழிலாகு பெயர் அல்ல?

a)

ரோஜா மலர்ந்தது

b)

வறுவல் உண்டான்

c)

பொங்கல் வைத்தார்

d)

பொரியல் சமைத்தான்

4.

பின்வருவனவற்றுள் இடவாகு பெயர் கொண்ட சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

உலகம் வியந்தது

b)

வெற்றிலை நட்டான்

c)

புத்தகம் படித்தான்

d)

புயல்காற்று வீசியது

5.

கீழ்க்காணும் வாக்கியத்தோடு தொடர்புடைய ஆகுபெயரை தெரிவு செய்க.


முல்லை மணம் வீசியது

a)

சினையாகு பெயர்

b)

இடவாகு பெயர்

c)

தொழிலாகு பெயர்

d)

பொருளாகு பெயர்

6.

கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான ஆகுபெயர் வகையைத் தெரிவு செய்க.


i காலவாகு பெயர்

ii இடவாகு பெயர்

iii பண்பாகு பெயர்

iv இடுகுறிப் பெயர்

a)

i,ii

b)

i,iv

c)

i,ii,iii

d)

i,ii,iii,iv

7.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் சரியான பொருளாகு பெயரைத் தெரிவு செய்க.

a)

நேற்று, அம்மா கடையில் வாங்கி வந்த பலா சுவையாக இருந்தது.

b)

கம்பனைப் படிக்காமல் தமிழ்க்கவிதைச் சுவையை அறியமுடியாது.

c)

இன்று காலையில் எதிர்வீட்டுச் சாளரத்தில் நிலவைக் காணவில்லை.

d)

பல நாட்கள் தேடியும் இன்றுதான் யாப்பிலக்கணம் வாங்கினேன்.

8.

கோடிடப்பட்டுள்ள சொல் எவ்வகை ஆகுபெயரைக் குறிக்கிறது?


தலைக்குஒரு மாம்பழம் கொடு

a)

பொருளாகு பெயர்

b)

இடவாகு பெயர்

c)

காலவாகு பெயர்

d)

சினையாகு பெயர்

9.

பிரித்தெழுதுக.

அருந்தமிழ்



a)

அரும் + தமிழ்

b)

அருமை + தமிழ்

c)

அருந்து + தமிழ்

d)

அருந்த + தமிழ்

10.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் சரியான மையீற்றுப் பண்பு பெயரைத் தெரிவு செய்க.

a)

வெண்மை + குடம் = வெண்குடம்

b)

கருப்பு + வண்டு = கருவண்டு

c)

இளமை + அழகு = இளவழகு

d)

பசுமை + கொடி = பசுமைகொடி