Worksheetsகாலங்கள்
Total questions: 8
Worksheet time: 7mins
இவற்றுள் எவை நாம் படித்த காலங்களில் இடம்பெறவில்லை?
இறந்த காலம்
நிகழ்காலம்
நல்ல காலம்
எதிர்காலம்
நகுலன் கடைக்குச் சென்றான். இவ்வாக்கியம் எந்தக் காலத்தினைச் சேர்ந்தது?
நிகழ்காலம்
இறந்த காலம்
எதிர்காலம்
எதிர்த்த காலம்
வனிதா பூங்காவில் பூப்பறிக்கின்றாள். இவ்வாக்கியம் எந்தக் காலத்தினைச் சேர்ந்தது?
எதிர்காலம்
இறந்த காலம்
நிகழ்காலம்
நகல்காலம்
எது சரியான இறந்த காலம் வாக்கியம்?
செல்வி கடைக்குச் சென்றாள்.
தேவி நீர் அருந்துவாள்.
அகிலா சாலையில் ஓடிக்கொண்டிருக்கிறாள்.
குமுதா நாளை வருவாள்.
வேடன் காட்டிற்குச் செல்கிறான். இவ்வாக்கியம் எந்தக் காலத்தினைச் சேர்ந்தது?
இறந்தகாலம்
கெட்ட காலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
நாளை மழை பெய்யும். இவ்வாக்கியம் எந்தக் காலத்தினைச் சேர்ந்தது?
எதிர்காலம்
நிகழ்காலம்
இறந்த காலம்
புகழ் காலம்
எது சரியான நிகழ்கால வாக்கியம்?
வளவன் மேடைக்கு வருகின்றான்.
மாணவர்கள் திடலில் ஓடுவார்கள்.
பறவைகள் உயரே பறந்தன.
நான் ஒரு மிதிவண்டி.
எது சரியான எதிர்கால வாக்கியம்?
தருண் பள்ளிக்கு வந்தான்.
தருண் பள்ளிக்கு வருகிறான்.
தருண் பள்ளிக்கு வருவான்.
தருண் மிகவும் நல்லவன்.
