NEW
Font size
Worksheetsஅலகு 6 - இலக்கணம் - வேற்றுமை
Total questions: 10
Worksheet time: 5mins
பெயர்ச்சொல்லை வேறுபடுத்துக் காட்டுவதை எவ்வாறு அழைப்பர்?
வினைச்சொல்
வேற்றுமை
ஏவற்பொருள்
எல்லைப் பொருள்
பாண்டியன் ____________ அழித்தான்.
பகைவரை
பகைவரில்
பகைவருக்கு
பகைவர் கண்
பின்வருவனவற்றுள் தகுதிப் பொருள் எது?
கீரிக்குப் பகை பாம்பு
பாண்டுவுக்கு மகன் தருமன்
ஆசிரியருக்கு அறிவு.
மானை ஒத்தாள்.
பினவருவனவற்றுள் நான்காம் வேற்றுமை உருபு எது?
ஐ
கண்
இல்
கு
பின்வருவனவற்றுள் உறுப்புத் தற்கிழமை எது?
கண்ணனது கருமை
அரிசியது பொடி
கீரிக்குப் பகை பாம்பு
மரத்தினது கிளை
எட்டாம் வேற்றுமையில் ஈறு குன்றலுக்கு எடுத்துக்காட்டு எது?
நண்ப!
மகனே!
அம்மா!
கண்ணா
மூன்றாம் வேற்றுமையின் முதல் கருவிக்கு எடுத்துக்காட்டுத் தருக.
சிற்பியாலாகிய சிற்பம்
மண்ணாலான பானை
புலவனாலான நூல்
மாணவருக்கு கிடைத்த விருது
”அரசனது அரண்மனை” என்பது எந்த வேற்றுமைக்குரிய எடுத்துக்காட்டு ஆகும்?
முதலாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
பின்வருவனவற்றுள் பொருட் பிறிதின் கிழமைக்கு எடுத்துக் காட்டு எது?
அரிசினது பொடி
மானினது கண்
குயிலின் கருமை
வேலனது நூல்
இரண்டாம் வேற்றுமையை வேறு எவ்வாறு அழைப்பர்?
எழுவாய் வேற்றுமை
செயற்படுபொருள் வேற்றுமை
கண் வேற்றுமை
விளி வேற்றுமை
