wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வினைச்சொல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பின்வருவனவாற்றுள் தெரிநிலை வினைமுற்றுக்கு எடுத்துக்காட்டு எது?

a)

அவன் படித்தான்

b)

அவன் சிறுவன்

c)

அவன் புலவன்

d)

அவன் கவிஞன்

2.

பின்வருவனவற்றுள் பெயரெச்சச் சொல் எது?

a)

ஆடி

b)

ஓடி

c)

எழுதி

d)

ஓடுகின்ற

3.

'குடிப்பாள்’ என்ற தெரிநிலை வினைமுற்றுச் சொல் காட்டுகின்ற காலம் எது?

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

4.

'ஓடிய’ என்ற சொல் எதற்கான எடுத்துக்காட்டு?

a)

தெரிநிலை வினைமுற்று

b)

குறிப்பு வினைமுற்று

c)

பெயரெச்சம்

d)

வினையெச்சம்

5.

பின்வருவனவற்றுள் தன்வினைக்கான எடுத்துகாட்டு எது?

a)

அரசன் சிலையை செய்வித்தான்.

b)

ஆசிரியர் பரிசை வென்றார்.

c)

ஆசிரியர் சிறந்த பெறுபேற்றைப் பெறுவித்தார்.

d)

சோழன் தேவாரங்களைத் தொகுப்பித்தார்.

6.

பின்வருவனவற்றுள் எதிர்மறை வாக்கியம் எது?

a)

மாணவன் தேர்வை எழுதினான்.

b)

அசிரியர் நன்றாகக் கற்பித்தார்.

c)

இராமன் வில்லை வளைத்தான்.

d)

அரசன் போரை வெல்லவில்லை.

7.

பின்வருவனவற்றுள் செயப்பாட்டு வினை எது?

a)

திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது.

b)

அரசன் கோவிலைக் கட்டுவித்தான்.

c)

படிக்காத மாணவி தேர்வில் சித்தியடையவில்லை.

d)

கண்ணன் புல்லாங்குழல் வாசித்தான்.

8.

பின்வருவனவற்றுள் எதிர்மறை வினை எது?

a)

வேடன் அம்பை எய்தான்.

b)

மாணவன் நன்றாக ஓடவில்லை.

c)

பரிசில் மாணவனால் வெல்லப்பட்டது.

d)

அரசன் புலியைக் கொல்வித்தான்.

9.

பின்வருவனவற்றுள் குறிப்பு வினை எது?

a)

குயிலி தமிழைப் படித்தாள்.

b)

அவர் ஒரு சிறந்த புலவர்.

c)

மாணவி கிளித்தட்டு விளையாடினாள்.

d)

அரசன் ஓவியத்தை வரைவித்தார்.

10.

'ஆசிரியர் பயிற்சியைச் செய்வித்தார்’ என்பது:

a)

வினையெச்சம்

b)

பெயரெச்சம்

c)

தன்வினை

d)

பிறவினை