NEW
Font size
Worksheetsபத்தாம் வகுப்பு இயல் - 3,4
Total questions: 15
Worksheet time: 8mins
நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்நச்சு மரம்பழுத் தற்று – இக்குறளில் பயின்று வரும் அணி எது?
அ) உவமையணி
ஆ) எடுத்துக்காட்டு உவமையணி
இ) ஏகதேச உருவக அணி
ஈ) உருவக அணி
உயிரினும் மேலானதாகக் கருதிப் பாதுகாக்க வேண்டியது……………………………….
அ) ஒழுக்கம்
ஆ) மெய் உணர்தல்
இ) கண்ணோட்டம்
ஈ) கல்வி
“ஒழுக்கம் விழுப்பம் தரலான்” என்பதில் அமைந்துள்ள நயம்……………………………….
அ) மோனை
ஆ) எதுகை
இ) முரண்
ஈ) இயைபு
“முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்” இதில் “இன்மை’ என்பதன் பொருள்……………………………….
அ) வறுமை
ஆ) இல்லை
இ) முயற்சி
ஈ) செல்வம்
“பெரியாரைப் பேணித் தமராக் கொளல்” இதில் “தமர்” என்பதன் பொருள்……………………………….
அ) நூல்
ஆ) துணை
இ) பேறு
ஈ) அரிய
பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
அ) 105
ஆ) 155
இ) 205
ஈ) 255
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் …………. திருமொழியாக உள்ளது பெருமாள் திருமொழி.
அ) மூன்றாம்
ஆ) நான்காம்
இ) ஐந்தாம்
ஈ) ஆறாம்
பெருமாள் திருமொழியைப் பாடியவர்…………………..
அ) திருமங்கையாழ்வார்
ஆ) குலசேகராழ்வார்
இ) நம்மாழ்வார்
ஈ) பொய்கையாழ்வார்
குலசேகர ஆழ்வாரின் காலம்……………..நூற்றாண்டு.
அ) ஆறாம்
ஆ) ஏழாம்
இ) எட்டாம்
ஈ) பத்தாம்
‘வாளால் அறுத்து’ எனத் தொடங்கும் பெருமாள் திருமொழியின் பாடப்பகுதியாக உள்ள முதலாயிரத்தின் பாசுரம்?
அ) 681
ஆ) 691
இ) 541
ஈ) 641
பொருத்தமில்லாத ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்
ஆ) முதலாயிரம்
இ) ஐந்தாம் திருமொழி
ஈ) திருப்பாவை
“நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேன்” என்றவர் ………………….
அ) குலசேகராழ்வார்
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்
இ) மக்க ள்
.ஈ) மருத்துவர்
‘மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்’ என்னும் அடிகளில் ‘மாயம்’ என்பதன் பொருள்.
அ) பொய்மை
ஆ) நிலையாமை
இ) விளையாட்டு
ஈ) அற்புதம்
காதல் நோயாளன் போன்றவர் …………………..
அ) குலசேகராழ்வார்
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்
இ) மக்கள்
ஈ) மருத்துவர்
இப்படத்திற்குப் பொருத்தமான குறள் எது ?
அ) உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்கல்லார் அறிவிலா தார்.
ஆ)முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.
இ)பண்என்னாம் பாடற் இயைபின்றேல்; கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்.
ஈ)கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கியகோடிஉண் டாயினும் இல்
