Worksheetsதமிழ்மொழி இலக்கணம்
Total questions: 10
Worksheet time: 3mins
1. கீழ்காண்பவற்றுள் எது தன்வினை வாக்கியம்?
அ. தம்பி படிப்பித்தான்
ஆ. மாதவி நடனம் ஆடினாள்
இ. தாத்தா உண்பித்தார்
ஈ. கலைஞர் பாடுவித்தார்
2. தன்வினையைக் குறிக்கும் சொல்லைத் தெரவு செய்க.
அ. உண்பித்தாள்
ஆ. எழுதுவித்தார்
இ. கற்றார்
ஈ. செய்வித்தேன்
3. பின்வருவனவற்றுள் பிறவினைச் சொல்லைத் தெரிவு செய்க.
அ. உண்டார்
ஆ. உண்பித்தார்
இ. ஊட்டினார்
4. கீழ்க்காணும் அட்டவணையில் சரியான புணர்ச்சியைத் தெரிவு செய்க.
அ. வில்வ + இந்திரம் = வில்வேந்திரம்
ஆ. பரம + உத்திரம் = பரமமுத்திரம்
இ. சர்வ + ஈஸ்வரன் = சர்வோஸ்வரன்
கவிதா + அஞ்சலி = கவிதேஞ்சலி
5. கீழ்க்காணும் வாக்கியங்களில் முற்றியலுகரச் சொல்லைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அ. பிறரைக் கெட்டது கூறுவது கூடாது
ஆ. இஃது ஓர் அரசனின் போர் வாள்
இ. முறையான உணவு நிறைவான வாழ்வு அளிக்கும்
ஈ. இன்று என் பள்ளியின் ஆண்டு விழா
6. பின்வருவனவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்
அ. நடு + தெரு = நடுத்தெரு
ஆ. சிறு + துளி = சிறுத்துளி
இ. இடு + பணி = இடுப்பணி
ஈ. நடை + பாதை = நடைப்பாதை
7. சரியான இணையைத் தெரிவு செய்க.
அ. பரிசு - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
ஆ. மனு - நெடில்தொடர்க் குற்றியலுகரம்
இ. எருது - மென்தொடர்க் குற்றியலுகரம்
ஈ. தராசு - வன்தொடர்க் குற்றியலுகரம்
8. கீழ்க்காணும் சொற்களுள் இடைத்தொடர்க் குற்றியலுகரச் சொல்லைத் தெரிவு செய்க.
அ. முரடு
ஆ. பட்டு
இ. செய்து
ஈ. மூன்று
9. கீழ்க்காணும் சொற்களில் நெடில்தொடர்க் குற்றியலுகரச் சொல்லைத் தெரிவு செய்க.
அ. சிரி
ஆ. மாசு
இ. விடு
ஈ.குழு
10. காலியான இடத்திற்கு ஏற்ற வன்தொடர்க் குற்றியலுகரச் சொல்லைத் தெரிவு செய்க.
அ. பஞ்சு
ஆ. உப்பு
இ. மிளகு
ஈ. மருந்து
