wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

PT3 தமிழ்மொழி (தொகுதி 3) - உமா பதிப்பகம்

Total questions: 10

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

பின்வரும் சூழலுக்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.


செழிப்பாக வளர்ந்திருந்த தமது பயிர்களைக் கூட்டமாக நுழைந்த ஆடுமாடுகள் சேதப்படுத்துவதைப் பார்த்த விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.

a)

துருதுருவென, நசநசவென

b)

விறுவிறுவென, பரபரவென

c)

தளதளவென, திமுதிமுவென

d)

துருதுருவென, விறுவிறுவென

2.

இரவு சூழத் தொடங்கியதால் தயக்கமடைந்த பவித்ரா தன் வீட்டை நோக்கி விரைவாக நடந்தாள்.

a)

பரபரவென

b)

விறுவிறுவென

c)

திமுதிமுவென

d)

சடசடவென

3.

பாடவேளையில் காவியனும் முகிலனும் ஓயாமல் பேசிக்கொண்டிருந்ததைக் கண்ட ஆசிரியர் கண்டித்தார்.

a)

தொணதொணவென

b)

சடசடவென

c)

நசநசவென

d)

துருதுருவென

4.

பின்வரும் வாக்கியத்திற்குப் பொருத்தமான இணைமொழியைத் தேர்ந்தெடுத்திடுக.


கோடைக்காலத்தில் தன்னுடைய பயிர்கள் அனைத்தும் காய்ந்து கருகியதைக் கண்ட விவசாயி கண் கலங்கினார்.

a)

நாணிக் கோணி

b)

வாடி வதங்கி

c)

அடக்க ஒடுக்கமாய்

d)

சீரும் சிறப்புமாய்

5.

கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமான இணைமொழியைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.


I. அரசாங்கத்தின் சட்டதிட்டங்கள் அனைத்தும் மக்களின் நலனுக்காக இயற்றப்பட்டுள்ளன.


II. திருமணத்தன்று மணமகள் நாணிக்கோணி நின்றுகொண்டிருந்தாள்.


III. 'கோவிட் 19' நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற மருத்துவர்கள் ஊண் உறக்கம் இன்றிப் பாடுபடுகின்றனர்.


IV. உலர வைத்த துணிகள் வாடி வதங்கி இருப்பதைக் கண்ட அம்மா அவற்றை எடுத்து வைத்தார்.

a)

I, II

b)

I, II, III

c)

II, III, IV

d)

I, II, III, IV

6.

பின்வரும் இணைமொழியின் சரியான பொருளைத் தெரிவு செய்க.


ஈடு இணை

a)

மேன்மை

b)

உன்னத நிலை

c)

சிறப்பு

d)

ஒப்பு

7.

வாக்கியத்திற்குப் பொருத்தமான உவமைத்தொடர் எது?


பல ஆண்டுகளாகப் பிறருக்குத் தெரிந்திராத மித்ரனின் பாடும் திறன் நேற்றைய பாட்டுப் போட்டியில் வெளிப்பட்டது.

a)

மணியும் ஒலியும் போல

b)

இலைமறை காய் போல

c)

பசுமரத்தாணி போல

d)

ஊமை கண்ட கனாப் போல

8.

பின்வரும் சூழலுக்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


தன் பணத்தைத் தன் நண்பன் திருடினான் என்பதை அறிந்த போதிலும் அதைப் போலீசாரிடம் புகார் செய்யாமல் இருந்தான் செல்வன்.

a)

ஊமை கண்ட கனாப் போல

b)

இலவு காத்த கிளி போல

c)

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

d)

இலைமறை காய் போல

9.

கீழ்க்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


அம்மா: நாளை, நீ பட்டம் பெற்றுப் பட்டதாரியாகிவிடுவாய் கனிமொழி. மகிழ்ச்சியாக உள்ளது.


கனிமொழி : அம்மா, அதைவிட முதலாம் ஆண்டில் நான் பள்ளியில் பரிசு பெற்றபோது அப்பாவும் நீங்களும் என்னைப் பாராட்டியது என்னால் இன்றளவும் மறக்க முடியாது அம்மா.

a)

தாயைக் கண்ட சேயைப் போல

b)

பசுமரத்தாணி போல

c)

அழகுக்கு அழகு செய்வது போல

d)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

10.

பின்வரும் மரபுத்தொடருக்கு ஏற்ற விளக்கத்தினைக் கொண்டுள்ள விடையைத் தேர்ந்தெடுத்திடுக.

a)

ஏட்டிக்குப் போட்டி – விதண்டாவாதம்

b)

வெட்டிப் பேச்சு – எதிருக்கெதிராகச் செயல்படுதல்

c)

அளவளாவுதல் – ஏசப்படுதல்

d)

தலை வணங்குதல் – பெரும் மனமகிழ்ச்சி அடைதல்