NEW
Font size
Worksheetsதமிழ் மொழி ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
என் பெரியப்பா வெளிநாட்டில் வாழ்கிறார். அவர் அங்கே ஒரு விஞ்ஞானியாக ________________
புரிகிறார்.
பனி
பணி
திரு. கதிரேசன் ஒரு அழகான ஓவியத்தை வாங்கினார். அவர் அதை மாட்டுவதற்குச் சுவரில் ஓர் _____________ அடித்தார்.
ஆனி
ஆணி
அந்தக் காட்டுக்கு யாரோ தீவைத்து விட்டு ஓடிவிட்டனர். அதனால் காடு தீப்பற்றி ________________.
எரிந்தது
எறிந்தது
ரவியும் பாலனும் கடைக்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் விளையாட அழகான ________________ வாங்கினர்.
கோலிகளை
கோழிகளை
என் மாமா அதிக பலம் படைத்தவர். ______________ தூக்கும் போட்டியில் அவர் வெற்றி பெற்றதால் நான் மகிழ்ந்தேன்.
கனம்
கணம்
இந்தியாவின் ஒரு பகுதியில் பழங்காலத்துக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் __________ எழுத்துகள் தமிழ் எழுத்துகள் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
பொரிக்கப்பட்ட
பொறிக்கப்பட்ட
குதிரை சவாரி செய்த ரகு எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்தான். அதனால் அவன் ____________ தாங்க முடியாமல் அழுதான்.
வலி
வழி
சந்தியா தன் பணப்பையைக்
காணாமல் தேடிக்கொண்டிருந்தாள். அது அறையின் _________________ கிடப்பதை அவள் தாயார் பார்த்தார்.
மூலையில்
மூளையில்
மதிய வேளையில் வெகு நேரம் நடந்ததால் முதியவருக்குத் தாகம் எடுத்தது. அவர் உடனே நீர் அருந்தித் தன் தாகத்தை ____________ கொண்டார்.
தனித்து
தணித்து
என் அண்ணனின் திருமணம் _________________ மாதத்தில் நடைபெறவுள்ளது. நாங்கள் அனைவரும் மிக ஆவலோடு அந்நாளை எதிர்பார்த்து இருக்கிறோம்.
ஆனி
ஆணி
