Worksheetsவேற்றுமை உருபு
Total questions: 10
Worksheet time: 5mins
1. காலி இடத்திற்குப் பொருத்தமான வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.
அகிலன் தன் வேலையாட்களிடம் உடனே ..................த் தொடங்கச் சொன்னார்.
வேலையில்
வேலையிடைய
வேலையை
வேலைகளில்
2. .......................... உடைமைகளை விட்டுவிட்டுக் கடற்கரையை நோக்கித் தலைதெறிக்க ஓடிப் படகில் ஏறினர்.
தங்களுக்கு
தங்களுடைய
தங்களால்
தங்களை
3. உன் மனக்குறைகளை அந்தப் ................................ முறையிட்டால், நிச்சயமாக உனக்குத் தெரிவு உண்டாகும்.
பெரியவரை
பெரியவரிடமிருந்து
பெரியவரிடம்
பெரியவரால்
4. எனது கையடக்க அகராதி ....................... சில ஏடுகள் கிழிந்து போயின
புத்தகத்தைச்
புத்தகத்தின்
பத்தகத்திற்குச்
புத்தகத்தோடு
5. பேரறிஞர்கள் இயற்றிய இலக்கிய நூல்கள், இந்நவீன ..................... கிடைப்பதற்கரிய செல்வங்களாகக் கருதப்படுகின்றன.
யுகத்தினுடைய
யுகத்திற்கு
யுகத்தில்
யுகத்தை
6. இசைக் கச்சேரி .................................. மங்கை பாடிய பாடல் அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.
இன்
இல்
அது
உடன்
7. கோடிட்ட இடத்தில் பொருந்தும் உருபுகள் யாவை?
ஏழை குடும்பம் பிறந்தாலும் இளமாறன் முயற்சி படித்து நாடறிந்ந பல் மருத்துவராகத் திகழ்கிறான்.
கு , ஓடு
இல் , உடன்
ஐ , ஓடு
இல் , கு
8. பின்வரும் வாக்கியத்தில் இரண்டாம் வேற்றுமை உருபைக் கொண்டுள்ள சொல் எது?
பாவேந்தர் பாரதிதாசன் தமிழர்களின் உயர்வுக்காகப் பல பாடல்களை இயற்றியுள்ளார்.
உயர்வுக்காக
தமிழர்களின்
பாவேந்தர்
பாடல்களை
9. கோடிட்ட இடங்களுக்கு ஏற்ற மிகச் சரியான வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.
பள்ளி நேரத்தில் நிறைவு நிகழ்ச்சிக்கு வருகை புரியும் அனைவருக்கும் சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
10. கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியான வேற்றுமை உருபைத் தாங்கி வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
நாயன்மார்கள் சிவபெருமானிடம் வழிப்பட்டனர்.
தமிழ்வேல் கோ.சாரங்கபாணி மலேசியாவின் வாழ்ந்த தமிழறிஞர்.
புத்தர் பெருமானுக்கு மனிதரிடையே காணும் வேறுபாடுகளை வெறுத்தார்.
ஆதிகாலவாசிகள் மரவுரி ஆடல்களை அணிந்தனர்.
