Font size
Worksheetsதமிழ்பேறு! தவப்பேறு!
Total questions: 10
Worksheet time: 5mins
"தமிழ்பேறு! தவப்பேறு!" எனும் கவிதையை எழுதிய கவிஞரின் பெயர் என்ன?
கவிவாணர் ஐ. உலகநாதன்
பாத்தேறல் இளமாறன்
இறையருட் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது
மேற்கண்ட மூன்றும் தவறு
'பேறு' எனும் சொல்லுக்குப் பொருள் என்ன?
சிறப்பு
பாக்கியம்
வாய்ப்பு
புகழ்
இக்கவிதையின் பாடுபொருள் யாது?
(a)
கவிதையில் காணப்படும் சந்த சொற்களைத் தெரிவு செய்க.
தமிழன் - தாய்மொழி
தோளிலும் - மார்பிலும்
பாட்டுமொழி - வீட்டுமொழி
அவப்பேறு - அமிழ்தம்
'அன்னையின் - சின்னவுன்' (கண்ணி 2)
மேற்காணும் சொற்கள் எந்த வகை இலக்கிய கூறைக் காட்டுகிறது ?
சந்தம்
எதுகை
மோனை
அனைத்தும் சரி
'அன்னையின் கருவில் வந்தமொழி' என்ற கவிதை வரியை விளக்குக.
'அமிழ்தினை உரிமை அடந்தவர் யாரும்
அருந்தா திருந்தால் அவப்பேறு'
மேற்காணும் கவிதை வரிகள் உணர்த்தும் சரியான கருத்தைத் தெரிவு செய்க.
அமிர்தத்தை அருந்தாமல் இருப்பது அவமானமாகும்.
இனிமையான தமிழ்மொழியை அறிந்தவர்கள் அதை பயன்படுத்தாமல் இருப்பது அவமானமாகும்.
இனிமையான தமிழ்மொழியை அனைவரும் எந்த பேதமும் இன்றி கற்றுக்கொள்ள வேண்டும்.
அமிர்தத்தை போன்ற சுவைமிக்க மொழியானது இந்தத் தமிழ்மொழி
கீழ்க்காணும் கவிதை அடியில் கோடிடப்பட்ட சொல்லுக்குச் சரியான பொருளை எழுதுக.
'தரணியில் எதையும் மிஞ்சுமொழி'
(a)
'எண்ணியல் என்ன மின்னியல் என்ன' இவ்வரிகளின் பொருள் யாது?
கணிதம் - மொழி
மொழி - வாய்ப்பாடு
கணிதம் - அறிவியல்
அறிவியல் - விஞ்ஞானம்
கீழ்க்காணும் வாக்கியத்தில் விடுப்பட்ட சொல்லை நிறைவு செய்க.
இக்கவிதையில், பைந்தமிழான தமிழ்மொழியைக் கற்பதே நாம் செய்த (a) எனக் கவிஞர் எடுத்துரைக்கிறார்.
