Worksheetsகணிதம் - மீள்பார்வை 3 (ஆண்டு 4)
Total questions: 10
Worksheet time: 39mins
படம், ஐந்து எண் அட்டைகளைக் காட்டுகிறது. இலக்கம் 9 , பத்தின் இடமதிப்பில் வருமாறு மிகச் சிறிய எண்ணை உருவாக்குக.
24 789
24 798
87 492
98 742
அட்டவணை 1, இரண்டு பேரங்காடிகள் குறிப்பிட்ட மாதத்தில் விற்ற ஷாம்பு புட்டிகளின் எண்ணிக்கையைக் காட்டுகிறது. அந்த இரண்டு பேரங்காடிகள் விற்ற மொத்த ஷாம்பு புட்டிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
39 926
40 141
39 977
40 124
படம், ஒரு குறிப்பு அட்டையில் ஒட்டப்பட்டிருக்கும் மூன்று எண்களைக் காட்டுகிறது. அந்த மூன்று எண்களின் கூட்டுத் தொகையைக் கணக்கிட்டு வரும் விடையை கிட்டிய நூறுக்கு மாற்றுக.
62 100
62 200
62 118
62 110
அட்டவணை, இரண்டு கிராமங்களின் மக்கள் தொகையைக் காட்டுகிறது. M கிராமத்தை விட N கிராமத்தில் எத்தனை பேர் அதிகமாக உள்ளனர்?
39 926
40 151
34 207
40 124
ஒரு தொல்பொருள் காட்சிக்கூடத்தில் 650 வாகனம் நிறுத்தும் இடங்கள் உள்ளன. அதற்குப் பக்கத்தில் உள்ள பேரங்காடியில் தொல்பொருள் காட்சிக்கூடத்தை விட 5 மடங்கு அதிகமான வாகனம் நிறுத்தும் இடங்கள் உள்ளன.
அந்தப் பேரங்காடியில் உள்ள வாகனம் நிறுத்தும் இடங்கள் எத்தனை?
3 250
3 120
2 600
130
61 328
இந்த எண்ணில் உள்ள மிகச் சிறிய இலக்கத்தின் இடமதிப்பு என்ன?
ஆயிரம்
பத்தாயிரம்
நூறு
பத்து
'எண்பத்து ஓராயிரத்து நூற்று முப்பத்து நான்கு’ -இன் எண் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
81 134
81 304
81 034
81 340
படம், நான்கு எண் அட்டைகளைக் காட்டுகிறது. ஒவ்வோர் அட்டையிலும் உள்ள 2 –இன் இலக்க மதிப்பைக் கொண்டு ஓர் எண்ணை உருவாக்குக.
2 020
22 022
2 022
22 220
கீழ்க்காணும் இரு எண்களில் எதில் இலக்கம் 5 மிகப் பெரிய மதிப்பைக் கொண்டுள்ளது?
54 639
67 508
53 026
31 547
ஒரு மடிக்கணினி நிறுவனம் 5 வருடங்களில் 78 900 மடிக்கணினிகளை விற்பனை செய்தது. ஒவ்வொரு வருடமும் ஒரே எண்ணிக்கையிலான மடிக்கணினியை விற்றது என்றால் ஒரு வருடத்தில் விற்கப்பட்ட மடிக்கணினிகளைக் கணக்கிடுக.
13 150
13 165
15 780
15 798
