Worksheetsஇலக்கியம் (மரபுத் தொடர்)
Total questions: 15
Worksheet time: 8mins
"பெரும்புளுகன்/பெருந்தீயன்" என்ற பொருளுக்கு ஏற்ற மரபுத் தொடர்?
ஆசாரக்கள்ளன்
அண்டப்புரட்டன்
தடை/தடங்கள்
வெள்ளிடைமலை
"ஒழுக்கமுள்ளவன் போல் நடிப்பவன்" என்ற பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடர் ?
அண்டப்புரட்டன்
தொன்று தொட்டு
ஆசாரக்கள்ளன்
ஈவிரக்கம்
"முட்டாளாக்குதல்/ ஏமாற்றுதல்" என்ற பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடர் ?
கங்கணம் கட்டுதல்
காதில் பூவைத்தல்
முட்டுக் கட்டை
தொன்று தொட்டு
"பெருமகிழ்ச்சி அடைதல்" எனும் பொருளுக்கு ஏற்ற மரபுத் தொடர் ?
அளவளாவுதல்
செவி சாய்த்தல்
ஒரு காலில் நிற்றல்
உச்சிக்குளிர்தல்
"உடன்படுதல், இணங்குதல்/இசைதல்" எனும் பொருளுக்கு ஏற்ற மரபுத் தொடர் ?
செவி சாய்த்தல்
அளவளாவுதல்
இடித்துரைத்தல்
ஆணித்தரம்
"மனக்கசிவு/கருணை" எனும் பொருளுக்கு ஏற்ற மரபுத் தொடர் ?
ஈயாடவில்லை
எள்ளளவும்
ஈவிரக்கம்
ஆணித்தரம்
"எவ்வேலையையும் செய்யத் திறமையற்றவன்" எனும் பொருளுக்கு ஏற்ற மரபுத் தொடர் ?
அண்டப்புரட்டன்
ஆசாரக்கள்ளன்
வலை வீசுதல்
கையாலாகாதவன்
"உறுதி" எனும் பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடர் ?
ஒரு காலில் நிற்றல்
இடித்துரைத்தல்
ஆணித்தரம்
எள்ளளவும்
"உறுதி பூணுதல்" எனும் பொருளுக்கு ஏற்ற மரபுத் தொடர் ?
கங்கணம் கட்டுதல்
ஆணித்தரம்
கண்ணும் கருத்துமாக
அரைப்படிப்பு
"பிறர் இல்லத்தில் விருந்துண்ணல்" எனும் பொருளுக்கு ஏற்ற மரபுத் தொடர் ?
அளவளாவுதல்
கைநனைத்தல்
இடித்துரைத்தல்
வலைவீசுதல்
"நன்மை தீமை அறியாதவன்/தீர்க்கமான முடிவு எடுக்க முடியாதவன்" எனும் பொருளுக்கு ஏற்ற மரபுத் தொடர் ?
இரண்டுங்கெட்டான்
கையாலாகாதவன்
ஈயாடவில்லை
அரக்கப்பரக்க
"அவமானத்தால் ஏற்படும் மகிழ்ச்சியின்மை" எனும் பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடர் ?
ஈவிரக்கம்
இடித்துரைத்தல்
எள்ளளவும்
ஈயாடவில்லை
" நெடுங்காலமாய்/ஆதிகாலத்திலிருந்து" எனும் பொருளுக்கு ஏற்ற மரபுத் தொடர் ?
கண்ணும் கருத்துமாக
ஏட்டிக்குப் போட்டி
வெள்ளிடைமலை
தொன்று தொட்டு
"எதிருக்கெதிராகச் செயல்படுதல்/ விதண்டாவாதம்" எனும் பொருளுக்கு ஏற்ற மரபுத் தொடர் ?
ஏட்டிக்குப் போட்டி
கங்கணம் கட்டுதல்
ஈயாடவில்லை
அரைப்படிப்பு
"முழுமையற்ற படிப்பு/நிரம்பாக் கல்வி" எனும் பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடர் ?
அளவளாவுதல்
கண்ணும் கருத்துமாக
எள்ளளவும்
அரைப்படிப்பு
