NEW
Font size
Worksheetsதமிழ் மொழி ஆன்டு 5 செய்யுள் மொழியணி
Total questions: 11
Worksheet time: 6mins
மன்னர்க் கழகு செங்கோன். செங்கோன் எனும் சொல்லின் பொருள் யாது?
அறிவு
நீதி
புத்திசாலித்தனம்
நிதி
இச்செய்யுள் இடம்பெற்றுள்ள நூல் எது? எழுதியவர் யார்?
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார்- கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் – செல்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொளளார்
கருமமே கண்ணாயி னார்
உலகநாத பண்டிதர் – உலகநீதி
ஒளவையார் – ஆத்திசூடி
குமரகுருபர சுவாமிகள் – நீதிமொழி
திருஞானசம்பந்தர் – தேவாரம்
ஆசிரியர் மாணவர்கள் _____________________ யில் சிறந்து விளங்க அறிவுரைத்தார்.
கல்வி கேள்வி
பேரும் புகழும்
ஒளிவு மறையும்
அரை குறை
ஏழை மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்கு அரசாங்கம் சம்பளத்துடன் தொழிற்பயிற்சித் திட்த்தை ஏற்படுத்தி __________________________________ .
கடுக்காய் கொடுத்தது
கை கூடியது
தட்டிக் கழித்தல்
கை கொடுத்தது
போப் பாடகர் மைக்கல் ஜாக்சன் இறந்த செய்தி உலகம் முழுவதும்-___________ போலப் பரவியது.
இலைமறைக்காய்
காட்டுத் தீ
சிலைமேல் எழுத்து
அனலில் இட்ட மெழுகு
எனது தந்தையை அவருடைய முதலாளி ஒருமுறை அவமானப்படுத்தி விட்டார். அந்த அவமானத்தை இன்னமும் தன்னால் மறக்க முடியவில்லை என்றார் தந்தை.
சூரியனைக் கண்ட பனிப் போல
சிலை மேல் எழுத்து போல
அனலில் இட்ட மெழுகு போல
வேலியே பயிரை மேய்ந்தாற் போல
மனித வாழ்வில் _____________ஏற்படுவது இயல்பு என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
கரடு முரடு
மேடு பள்ளம்
அருமை பெருமை
இன்பத் துன்பம்
'ஒருவரை மரியாதை குறைவாகப் பேசுவது கற்றவர்களுக்கு அழகல்ல' என்று ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார். மேற்கண்ட கூற்றுக்கு ஏற்ற மரபுத் தொடரைத் தெரிவு செய்க.
நாக்கு நீளுதல்
தட்டிக் கழித்தல்
கறி பூசுதல்
அள்ளி விடுதல்
கீழ்க்காணும் பொருளுக்கேற்ற குறளைத் தெரிவு செய்க.
வாய்மை எனக் கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்க் குழையும் விருந்து
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொல்ல
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
' வேலியே பயிரை மேய்ந்தாற் போல' என்ற உவமைத் தொடருக்கு ஏற்ற விளக்கத்தைத் தெரிவு செய்க,
ஒரு பொருள் சேதமடைவதை யாராலும் தடுக்க இயலாது.
அனைவருக்கும் தெரிந்த ஒரு தகவல்.
எதிர்பார்த்து ஏமாற்றம் அடைதல்.
காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்.
திரு.ஏ.பி.ஜே அப்துல் கலாம் தான் இறந்தாலும் அனைவரும் போற்றும் வகையில் சாதனைகளைச் செய்து இவ்வுலகில் ______________________________
மேற்கண்ட சூழலுக்கு ஏற்ற இணைமொழி யாது?
திட்ட வட்டமாக
காது குத்தினார்
கிள்ளுக் கீரையாய்
பெயர் பொறித்தார்
