wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

SAINS PENGAWETAN TAHUN 6 ( M.THILAGAWATIY SJKT MGK )

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

கீழ்காண்பவற்றுள் எது உணவு பதனிடும் முறையல்ல?

a)

காற்று நீக்கி பொட்டலமிடுதல்

b)

பொறித்தல்

c)

ஊறவைத்தல்

d)

புகையிடுதல்

2.

உணவு பதனிடுமுறைகளில் ஊற வைத்தல் என்றால் என்ன?

a)

குறிப்பிட்ட வெப்பநிலையில் சூடாக்கப்பட்டு மிக விரைவாகக் குளிரச் செய்யப்படுதல்

b)

உணவை வெப்பப்படுத்தி காற்றுப் புகாத கலனில் அடைத்தல்

c)

நெருப்புப் புகையில் வைக்கப்பட்டு உலர்த்தப்படுதல்

d)

புளிக்காடியிலோ மற்ற காடித்தன்மையுடைய திரவங்களிலோ உணவைப் பொருள்களை பதனிடப்படுதல்

3.

எம்மாதிரியான பழங்களை ஊற வைத்தல் பதனிடப்படும் முறையில் பயன்படுத்தலாம்?

a)

டுரியான்

b)

வாழைப்பழம்

c)

மாங்காய்

d)

ரம்புத்தான்

4.

பழங்களை ஊற வைக்க எதை பயன்படுத்துகிறார்கள்?

a)

காடித்தன்மையுடைய திரவங்கள்

b)

சுடுநீர்

c)

குழாய் நீர்

d)

மழைநீர்

5.

ஊறவைத்தல் உணவுப் பொருள்களை சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகளை தருகின்றன?

a)

ஆரோக்கியம் தருகின்றன

b)

உடலுக்கு ஊட்டசத்தை தருகின்றன

c)

சிந்தனையாற்றலை அதிகரிக்கிறது

d)

எந்த நன்மையையும் தரவில்லை

6.

கீழ்க்காண்பனவற்றுள் எவை ( 3 விடைகள்) பால் கெட்டுவிட்டதை உணர்த்துகிறது?

a)

திரிந்து விடுதல்

b)

புளிப்புத் தன்மை

c)

நுரைத்து காணப்படுதல்

d)

மணமாக இருத்தல்

7.

பால் அதிக நாட்கள் கெடாமல் தடுக்கவும் அசல் நிலையிலிருந்து மாறாமல் இருக்கவும் என்ன முறையைக் கையாளலாம்?

a)

குளிர்பதனப் பெட்டியில் வைக்கலாம்

b)

சூடாக்கி வைக்கலாம்

c)

பெளடராக்கி புட்டியில் அடைக்கலாம்

d)

புட்டியில் அடைக்கலாம்

8.

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இவ்வேளையில் வெளியே சென்று உணவுகள் வாங்கவும் இயலாது. இவ்வேளையில் திரு. முனிரா எம்மாதிரியான உணவுகளை முன்கூட்டியே வாங்கி வைக்கலாம்? கீழே உள்ளவற்றில் ஒன்று விடை அல்ல. அதை கண்டறிக.

a)

அரிசி

b)

நெத்திலி

c)

சார்டின்

d)

கடுகுக் கீரை

9.

ஏன் படத்தில் காணும் உணவுப் பொருள் கெடுவதில்லை?

a)

உணவில் உள்ள காற்று வெளியேற்றப்பட்டுவிட்டது.

b)

உணவில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டுவிட்டது.

c)

உணவு புட்டியில் இருந்ததால்

d)

உணவு குளிர்பதனப் பெட்டியில் இருந்ததால்

10.

படத்தில் காணும் உணவுப்பொருள் ஏன் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கிறது?

a)

உணவில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டதால்

b)

உணவில் உள்ள காற்று வெளியேற்றப்பட்டதால்

c)

உணவின் காடித்தன்மை அதிகரிக்கப்பட்டதால்

d)

உணவின் வெப்பநிலை அதிகமாக உள்ளதால்

11.

நுண்ணுயிர்கள் வாழ ஏதுவான சூழல்கள் யாவை? (ஒன்றுக்கு மேற்பட்ட பதில்)

a)

மிதமான வெப்பநிலை

b)

காற்று

c)

நீர்

d)

ஏதுவான இரசாயனத்தன்மை

e)

போதுமான சத்துகள்

12.

நுண்ணுயிர்கள் வாழ ஏதுவான சூழல்கள் யாவை? (ஒன்றுக்கு மேற்பட்ட பதில்)

a)

மிதமான வெப்பநிலை

b)

காற்று

c)

நீர்

d)

ஏதுவான இரசாயனத்தன்மை

e)

போதுமான சத்துகள்

13.

நாம் வீட்டில் குடிநீரில் ஆபத்தான நுண்ணுயிர்கள் இருப்பதை எவ்வாறு தடுக்கலாம்?

a)

குளோரின் சேர்த்தல்

b)

கொதிக்க வைத்தல்

c)

குளிர்பதனப்பெட்டியில் வைத்தல்

d)

மண் பானையில் ஊற்றி வைகத்தல்






14.

கீழ்காண்பவற்றுள் எது உணவு பதனிடும் முறையல்ல?

a)

காற்று நீக்கி பொட்டலமிடுதல்

b)

பொறித்தல்

c)

ஊறவைத்தல்

d)

புகையிடுதல்

15.

உணவு கெடுவதற்கான காரணம் யாவை?

a)

நீர், சூரியன்

b)

காற்று, விலங்கு

c)

குச்சியமும் பூஞ்சணமும்

d)

நச்சியமும் அம்மையும்

16.

மீனைப் பதனிடும் முறைகளைத் தேர்ந்தெடு.

a)

உலர்த்துதல்

b)

குளிரச் செய்தல்

c)

கலனிடுதல்

d)

ஊற வைத்தல்

17.

உணவுப் பதனிடும் தொழில் நுட்பத்தின் அவசியம் ________________

a)

கெட்டுப் போன உணவுகளை அதிக நாள் வைப்பதற்கு

b)

உணவு விரயத்தை தவிர்த்து ஊட்டச்சத்துள்ள உணவை உண்பதற்கு

c)

உணவுகளைச் சுத்தம் செய்யாமல்இருப்பதற்கு

d)

தேவைக்கு அதிகமான உணவுகளை இருப்பில் வைப்பதற்கு

18.

கெட்டுப் போன உணவை உண்டால் ஏற்படக்கூடிய விளைவுகள் யாவை?

a)

வயிற்றுப் போக்கு

b)

துர்நாற்றம்

c)

நச்சுணவு

d)

ஈரம்

19.

எந்த உணவு அதிக நாட்கள் கெடாமல் இருக்கும்?

a)

இறைச்சி

b)

பிஸ்கெட்

c)

பால்

d)

சோறு

20.

கீழ்க்காணும் அனைத்துச் செயற்பாங்குகளும் உணவைக் கலனீடு செய்யும் செயற்பாங்குடன் தொடர்புடையவை. ஒன்றைத்தவிர...

a)

உணவைச் சமைத்தல்

b)

டின்களில் காற்றை நிரப்புதல்

c)

டின்களில் காற்றுப் புகாமல் அடைத்தல்

d)

கலனில் உள்ள பாக்டீரியாவைக் கொல்ல கலனைக் கொதிக்க வைத்தல்

21.

எந்தப் பதப்படுத்தும் முறையின்வழி அந்தக் குளிர்பானம் அதிக நாள் கெடாமலிருக்கும்?

a)

சீனி சேர்க்கப்பட்டதால்.

b)

உப்பு சேர்க்கப்பட்டதால்.

c)

வெப்பப்படுத்தப்பட்டு உடனடியாகக் குளிர வைத்ததால்.

d)

உலர வைத்துக் காற்றை வெளியேற்றியதால்

22.

பாஸ்டர் முறையில் தயாராகும் உணவுப்பொருள்கள் எவை?

a)

பழச்சாறு

b)

கோதுமை கஞ்சி

c)

பால்

d)

மிளகு இரசம்

23.

உலர்த்துவதால் நுண்ணுயிர்கள் இறந்து விடும். காரணம்...

a)

உணவில் உப்பு அதிகமாக இருப்பதால்

b)

உண்வில் நீர் உள்ளதால்

c)

உணவில் அதிக வெப்பமாக இருப்பதினால்

d)

உணவுப்பொருள்களில் உள்ள நீர் அகற்றப்படுவதால்

24.

குளிரச் செய்வதால் உணவில் உள்ள நுண்ணுயிரிகளின்..........

a)

நடவடிக்கை சுறுசுறுப்பாகிறது

b)

நடவக்கை செயல் இழக்கிறது

c)

நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை

d)

நடவடிக்கை தாமதமாகிறது

25.

இவற்றின் பதனிடும் முறை என்ன?

a)

கொதிக்க வைத்தல்

b)

குளிரச் செய்தல்

c)

உலர்த்துதல்

d)

காற்று நீக்கிப் பொட்டலமிடுதல்

26.

பருவம் இல்லாத காலத்திலும், உலர்த்துதல் மூலம் கிடைக்க பெறும் உணவு எது?

a)

டுரியான்

b)

கொய்யா

c)

மாம்பழம்

d)

அன்னாசி

27.

வெயிலில் உணவை உலர்த்துவதால், உணவின் சுவை...

a)

மாறுபடும்

b)

அப்படியே இருக்கும்

c)

அதிகரிக்கும்

d)

புளிக்கும்

28.

உணவு கெட மூலக் காரணமாக அமையும் நுண்ணுயிர்கள் யாவை?

a)

குச்சியம், நச்சியம்

b)

குச்சியம், பூஞ்சணம்

c)

பூஞ்சணம் மட்டும்

d)

புரோட்டோசோவா

29.

அம்மா மதிவாணனை கோழி இறைச்சி வாங்கி வருமாறு கூறினார். இதற்கு முன் கோழி வாங்கி பழக்கம் இல்லாத அவனுக்கு அம்மா கெட்டுப்போன கோழிகளின் தன்மையை விளக்கினார். எது கெட்டுப்போன கோழி இறைச்சியின் தன்மைகள் அல்ல.

a)

இழையமைப்பில் மாற்றம்

b)

துர்நாற்றம் வீசுதல்

c)

வழவழப்புத்தன்மை

d)

புளிப்புத் தன்மை

30.

மிக விரைவில் கெட்டுப்போகாத உணவுப்பொருள் எது?

a)

சாதம்

b)

தேன்

c)

கேரட்

d)

பால்