NEW
Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 3 திருமதி.கி.பத்மாவதி.
Total questions: 10
Worksheet time: 5mins
"வீட்டிற்கு வெளியே வெடித்த பட்டாசு சத்தம் எனக்குக் கேட்டது.
மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற சரியான உற்றறிதல் புலனைத் தெரிவு செய்க.
கண்
காது
நாக்கு
மூக்கு
மஞ்சள், சிவப்பு மற்றும் பச்சை பந்துகளை நிறத்திற்கு ஏற்ப மூன்று பெட்டிகளில் போடப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட அறிவியல் செயற்பாங்கைக் குறிப்பிடுக.
தொடர்பு கொள்ளுதல்
ஊகித்தல்
வகைப்படுத்துதல்
தென்னை மரம் ...................
உயிருள்ளது
உயிரற்றது
நடமாடும்
கீழ்க்காணும் விலங்குகளுள் எது அவற்றின் வெளித்தோற்றத்துடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளது.
மீன் - இறகு
குரங்கு - செதில்
ஆமை - உறுதியான ஓடு
திமிங்கலத்தை ஒட்டிய சரியான கூற்றைத் தெரிவு செய்க.
குட்டி போடும்.
செதில் உடையது.
உறுதியான ஓடு உடையது.
பின்வரும் தாவரங்களில் எது நீரில் வாழும்?
ரம்புத்தான் மரம்
தாமரைச் செடி
வாழை மரம்
பின்வரும் விலங்குகளில் எந்த விலங்கு நீரிலும் நிலத்திலும் வாழும்?
ஆந்தை
சிங்கம்
தவளை
பினவருவனவற்றுள் எது மனிதனின் அடிப்படைத் தேவை அல்ல?
தொலைப்பேசி
காற்று
நீர்
ஒரு கோழி மண்ணில் மண்புழு இருக்கிறதா என்று தேடுகிறது. எந்த அடிப்படைத் தேவைக்காக அந்த கோழி அப்படிச் செய்கிறது?
உணவு
நீர்
காற்று
பாதுகாப்பிடம்
தாவரங்கள் உயிர் வாழ நீர், காற்று, ........ தேவை.
சூரிய ஒளி
காற்று
நாற்று
