WorksheetsDarshan 6
Total questions: 13
Worksheet time: 13mins
தாவரத்தின் தளிர்ப் பகுதி எந்தத் தூண்டலுக்கு ஏற்பத் துலங்குகிறது?
நீர்
சூரிய ஒளி
புவி ஈர்ப்புச் சக்தி
தொடுதல்.
தாவரத்தின் ஒளிச்சேர்க்கையின் வழி மனிதர்களும் விலங்குகளும் தங்களுக்குத் தேவையானவற்றைப் பெறுகின்றனர். ஒன்றனைத் தவிர....
உயிர்வளி
கரிவளி
வசிப்பிடம்
உணவு
தாவரத்தின் இலைகள் பச்சை நிறத்தில் இருப்பதன் காரணம் அதிலுள்ள ________ ஆகும்.
பச்சையம்
நீர்
வண்ணம்
கரிவளி
ஒளிச்சேர்க்கை தாவரத்தின் _________________ பகுதியில் நடைபெறுகிறது.
வேர்
இலை
தண்டு
தளிர்
தாவரங்கள் _______, __________, __________, __________ துணையுடன் உணவு தயாரிக்கின்றன.
(ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள்)
கரிவளி
சூரிய ஒளி
நீர்
பச்சையம்
உயிர்வளி
ஒளிச்சேர்க்கையின்வழி தாவரம் _________பொருளை உணவாக பெறுகின்றது.
கஞ்சி
நீர்
கரிவளி
உயிர்வளி
ஒளிச்சேர்க்கையின் போது தாவரம் ___________ வெளியிடுகின்றது.
கரிவளி
நீராவி
உயிர்வளி
கஞ்சி
ஒளிச்சேர்க்கையின் முக்கியத்துவம் யாவை?
(ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள்)
உயிர்வளியைக் கொடுக்கின்றது
உணவைத் தருகிறது
பூமி வெப்பமாவதிலிருந்து தடுக்கிறது
கரிவளியைக் கொடுக்கிறது
____________ என்பது தாவரங்கள் சுயமாக உணவு தயாரிக்கும் செயற்பாங்காகும்.
ஒளிகதிர்
ஒளியோட்டம்
பச்சையம்
ஒளிச்சேர்க்கை
ஒரு வாரத்திற்குப் பிறகு செடியின் இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டன. இச்செடிக்கு என்ன கிடைக்கவில்லை?
நீர்
பச்சையம்
சூரிய ஒளி
கரிவளி
ஒளிச்சேர்க்கை நடைப்பெற என்ன தேவை?
நீர், கரிவளி மட்டும்.
நீர், கரிவளி, பச்சையம், சூரிய ஒளி
கரிவளி, பச்சையம், சூரிய ஒளி
நீர், கரிவளி, பச்சையம்
தாவரத்தின் எந்தப் பகுதி நீர் மற்றும் புவி ஈர்ப்புச் சக்திக்கும் துலங்குகின்றது?
வேர்
தளிர்
தண்டு
இலை
தொடுதல் தூண்டலுக்குத் துலங்கும் தாவரம் எது?
மன்பத ஈப்பொறி
காசித்தும்பை
ரோஜா செடி
புல்
