wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுளும் மொழியணியும் 1-ஆத்திசூடி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் உரையாடலுக்கு ஏற்ற செய்யுளைத் தெரிவு செய்க.


இராமு : என்னை விடு! வேண்டுமென்றே

என்னைக் கீழே தள்ளி விட்ட

அவனை என்ன செய்கிறேன் பார்?

தோழன் : வேண்டாம் இராமு. வேண்டாம்,

சற்றுப் பொறு.

a)

ஈ. ஏற்பது இகழ்ச்சி

b)

அ. ஊக்கமது கைவிடேல்

c)

ஆ. ஆறுவது சினம்

d)

இ. ஈவது விலக்கேல்

2.

எண்களையும் மொழியையும் அலட்சியம் செய்யக் கூடாது என்பதை விளக்கும் சரியான செய்யுளைத் தெரிவு செய்க.

a)

அ. ஒப்புர வொழுகு

b)

ஆ.ஓதுவ தொழியேல்

c)

இ.ஔவியம் பேசேல்

d)

ஈ.எண்ணெழுத் திகழேல்

3.

கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

மாறன் தினந்தோறும் நன்னெறி கதை புத்தகங்களை வாசிப்பான். படித்தவற்றைக் கருத்தில் கொள்வான். அதன்படி நடப்பான்.

a)

அ.எண்ணெழுத் திகழேல்

b)

ஆ. ஓதுவ தொழியேல்

c)

இ. ஏற்பது இகழ்ச்சி

d)

ஈ. ஒப்புர வொழுகு

4.

கொடுக்கப்பட்டுள்ள உரையாடலுக்கு ஏற்ற செய்யுளைத் தெரிவு செய்க.

மருத்துவர் : தம்பி உடலுக்குப் பலத்தையும் ஆரோக்கியத்தையும் தரும் உணவைச் சாப்பிட்டு. இனிப்பான உணவுகளைக் குறைத்துக் கொள். மாறன்:சரி ஐயா. பல் வலியால் நான் பட்ட பாடு போதும். இனி இனிப்பைத் தொட மாட்டேன்.

a)

அ. ஊக்கமது கைவிடேல்

b)

ஆ. ஈவது விலக்கேல்

c)

இ. ஐயம் இட்டு உண்

d)

ஈ ஊண்மிக விரும்பு.

5.

இளமாறன் ஒரு விவசாயி. இருப்பினும் தன்னை நாடி வருபவர்களை ஏமாற்றாது அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வான்.

மேலே உள்ள விளக்கத்திற்குப் பொருத்தம் செய்யுளைத் தெரிவு செய்க.

a)

அ.அறம் செய விரும்பு

b)

ஆ. இயல்வது கரவே

c)

இ. ஏற்பது இகழ்ச்சி

d)

ஈ. ஔவியம் பேசேல்

6.

தனசீலன் நல்ல பண்பாளர். பசி என்று தன்னை நாடி வருவோர்க்கு உணவளிப்பார். அதன் பின்னரே தானும் உண்பார்.

கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்குச் சரியான செய்யுளைத் தெரிவு செய்க.

a)

அ. ஊக்கமது கைவிடேல்

b)

ஆ. ஐயமிட்டு

c)

இ. ஈவது விலக்கேல்

d)

ஈ. ஔவியம் பேசேல்

7.

உழைப்பின்றி பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயல் என்று ஔவையார் கூறி இருக்கிறார்.

இக்கூற்றுக் கேற்ற செய்யுளைத் தெரிவு செய்க.

a)

அ. ஏற்பது இகழ்ச்சி

b)

ஆ. அறம் செய விரும்பு

c)

இ. இயல்வது கரவேல்

d)

ஈ.ஊக்கமது கைவிடேல்

8.

ஔவியம் பேசேல்.

ஔவை அருளிய ஆத்திசூடியின் சரியன பொருளைத் தெரிவு செய்

a)

அ. நல்ல நூல்களை நாளும் படிக்க வேண்டும்

b)

ஆ. பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக்கூடாது

c)

இ.பிறரோடு சேர்ந்து வாழக்கூடாது

d)

ஈ.பொறாமை கொண்டு பிறரிடம் சேர்ந்து வாழ கூடாது.

9.

1 3 6 ய த ர 7 9 0 ண ழ

மேற்காணும் அட்டவணைக்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க

a)

அ.ஏற்பது இகழ்ச்சி

b)

ஆ.ஓதுவது ஒழியேல்

c)

இ.இயல்வது கரவேல்

d)

ஈ. எண்ணெழுத் திகழேல்

10.

சரியான இணையைத் தெரிவு

a)

அ. ஈவது விலக்கேல் - பிறருக்குச் செய்யப்படும் உதவியைத் தடுக்க வேண்டும்.

b)

.ஊக்கமது கைவிடேல் - முயற்சியை விட்டு விட வேண்டும்.

c)

.ஓதுவ தெழியேல்- நல்ல நூல்களை நாளும் படிப்பதைக் கை விடக் கூடாது.

d)

ஈ.ஔவியம் பேசேல் -பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப்பேசலாம்