wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் மீள்பார்வை ஆக்கம் : திருமதி பொ. யமுனாவதி

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சுட்டெழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

3

b)

4

c)

5

2.

ஏற்ற நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.

மலர்விழி சந்தையில் காய்கறிகள் __பூக்கள்__பழங்கள் ஆகியவற்றை வாங்கினாள்.

a)

; ,

b)

, ;

c)

, ,

3.

கீழ்க்காணும் வாக்கியத்தில் எழுவாயைத் தெரிவு செய்க.

மழையில் நனைந்து கொண்டே இரவி வீடு வந்தான்.

a)

மழை

b)

இரவி

c)

வீடு

4.

சரியான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.

என் தந்தை நாவல்களை விரும்பிப் படிப்பார்._____________, தாய் சிறுகதைகளையே விரும்புவார்.

a)

மேலும்

b)

ஆனால்

c)

ஆகவே

5.

சரியாக வலிமிகுந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க.

a)

இந்த + பாதை = இந்த பாதை

b)

எந்த + கழகம் = எந்த கழகம்

c)

அந்த + பையன் = அந்தப் பையன்

6.

முதலாம் வேற்றுமை உருபைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

வளர்மதி நடனம் ஆடினாள்.

b)

வளர்மதியின் திறமை உலகெங்கும் பரவியது.

c)

அனைத்துலக நடனப் போட்டியில் வெற்றி பெற்ற வளர்மதிக்குப் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

7.

அந்தப் பேழை பலகையால் செய்யப்பட்டது.

பலகையால் என்ற சொல் எந்த வேற்றுமை உருபைச் சார்ந்தது ?

a)

ஆறாம் வேற்றுமை உருபு

b)

மூன்றாம் வேற்றுமை உருபு

c)

இரண்டாம் வேற்றுமை உருபு

8.

சினைப்பெயரை ஏற்றுள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

சிவப்பு பேருந்து

b)

பசுமையான காடு

c)

யானையின் தந்தம்

9.

பிழையாக வலிமிகுந்துள்ள சொற்களைத் தெரிவு செய்க.

a)

சில பள்ளிகள்

b)

எதுக் கூடை

c)

வரும்படி கூறினார்

10.

சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

நேற்று கவிதா கோயிலுக்குச் செல்வாள்.

b)

அடுத்த வாரம் என் பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெறும்.

c)

கடந்த வார விடுமுறையில் மாமா எங்கள் வீட்டிற்கு வருகிறார்.

11.

படத்துடன் தொடர்புடைய தொகுதிப்பெயர் என்ன?

a)

கொத்து

b)

சீப்பு

c)

குலை

12.

வாழ்ந்தனர் என்ற சொல்லின் அடிச் சொல் என்ன?

a)

வாழ்வு

b)

வாழ்

c)

வாழ்வியல்

13.

எது தவறான இனவெழுத்து இணை ?

a)

ந்-த

b)

ண்-ற

c)

ண்-ட

14.

மகிழன் நூல்நிலையத்திற்குச் சென்றான்.


எது இனவெழுத்தைக் கொண்ட சொல்?

a)

மகிழன்

b)

நூல்நிலையத்திற்குச்

c)

சென்றான்

15.

பாடுதல், கேட்டல், படித்தல்


மேற்காணும் சொற்கள் என்ன வகை பெயர்ச்சொற்கள் ஆகும்?

a)

தொழிற்பெயர்

b)

பொருட்பெயர்

c)

சினைப்பெயர்