WorksheetsP4 TL SA2 Revision (27 Oct)
Total questions: 20
Worksheet time: 10mins
சிறுவர்கள் திடலில் விளையாடினார்கள்.
__________________ திடலில் விளையாடினாய்.
நீ
நீங்கள்
பறவை வானத்தில் பறந்தது.
__________________ வானத்தில் பறந்தன.
பறவை
பறவைகள்
நான் விலங்கியல் தோட்டத்திற்குச் சென்றேன்.
நாங்கள் விலங்கியல் தோட்டத்திற்குச் __________________.
சென்றோம்
சென்றார்கள்
அவர்கள் தொலைக்காட்சியைப் பார்த்தார்கள்.
அவன் தொலைக்காட்சியைப் _____________________.
பார்த்தான்
பார்த்தாள்
குமார் தன் நண்பர்களுடன் திடலில் காற்பந்து விளையாடினான்.
மாணவர்கள் தங்களின் நண்பர்களுடன் திடலில் காற்பந்து _____________.
விளையாடினார்
விளையாடினார்கள்
அளவுக்கு ______________ அமுதமும் நஞ்சு
ஏறினால்
மிஞ்சினால்
மீறினால்
குறைந்தால்
அகத்தின் அழகு _______________ தெரியும்.
முகத்தில்
வயிற்றில்
தோளில்
காலில்
கீழோர் ஆயினும் _______________ உரை.
வாழ
சேர
தாழ
போக
தேடாது அழிக்கின் ______________ முடியும்.
மேடாய்
காடாய்
வீடாய்
பாடாய்
இளமையில் சோம்பல் முதுமையில் ________________.
வறுமை
பெருமை
நேர்மை
ஆண்மை
பட்டம் வானத்தில் உயரமாகப் பறந்தது.
_____________________ வானத்தில் உயரமாகப் பறந்தன.
பட்டம்
பட்டங்கள்
நான் காய்ந்த துணிகளை மடிக்கிறேன்.
சுந்தரி காய்ந்த துணிகளை _____________________.
மடித்தாள்
மடிக்கிறாள்
தலைவர் துன்பத்திலிருந்து மக்களைக் காப்பாற்றினார்.
நீங்கள் துன்பத்திலிருந்து மக்களை _____________________.
காப்பாற்றினீர்கள்
காப்பாற்றுகிறீர்கள்
மாலதி தேசிய தின நிகழ்ச்சியில் நடனம் ஆடுவாள்.
_____________________ தேசிய தின நிகழ்ச்சியில் நடனம் ஆடுவோம்.
நான்
நாங்கள்
வேலு மூலிகைகளைக் கொண்டு மருந்து தயாரிக்கிறார்.
வைத்தியர்கள் மூலிகைகளைக் கொண்டு மருந்து _____________________.
தயாரிக்கிறார்கள்
தயாரித்தார்கள்
சிறுவர்கள் திடலில் காற்பந்து விளையாடுகிறார்கள்.
____________________ திடலில் பந்து விளையாடுகிறேன்.
நீ
நான்
பூனைக்குட்டிகள் மகிழ்ச்சியாக விளையாடின.
ரவி தன் தோழர்களுடன் ____________________.
விளையாடினான்
விளையாடுவான்
நீ இரவு உணவு சாப்பிட்டாயா?
____________________ இரவு உணவு சாப்பிட்டீர்களா?
நீங்கள்
அவர்கள்
நான் கடற்கரையில் நீந்தினேன்.
நாங்கள் கடற்கரையில் ___________________.
நீந்துகிறோம்
நீந்தினோம்
மாலதி இனிமையாகப் பாட்டு பாடுவாள்.
குயில்கள் இனிமையாகப் பாட்டு ____________________ .
பாடுகின்றன
பாடும்
