Worksheetsதமிழ்மொழி
Total questions: 20
Worksheet time: 3mins
'பாக்கு' என்பது என்ன வகை குற்றியலுகரம்?
வன்தொடர்க் குற்றியலுகரம்
மென்தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
நெடில்தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொல்லைத் தேர்ந்தெடு
பங்கு
அழகு
எஃது
மாசு
கீழ்க்காணும் எழுத்துகளில் எது குற்றியலுகர எழுத்துகள் அல்ல
கு
சு
டு
மு
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு - (426) என்ற திருக்குறளுக்கு ஏற்ற பொருள் யாது?
பல துறைகளைக் கற்று வாழவேண்டும்
அறிவு வளர்ச்சிக்குப் பல துறை கற்றல் அவசியம்
கால வளர்ச்சிக்கு ஏற்ப வாழ்வதே அறிவு
புதிய சிந்தனைகள் கொண்டு வாழவேண்டும்
'மலேசியா வென்றது' என்பது வகை ஆகுபெயர்
சினையாகு பெயர்
பண்பாகு பெயர்
காலவாகு பெயர்
இடவாகு பெயர்
கீழ்க்காண்பவற்றுள் எது காலவாகு பெயர்?
தலைக்குப் பத்து வெள்ளி
கார்த்திகை மலர்ந்தது
நீலம் சூட்டினாள்
உலகம் அழுதது
'சாக்குப் போக்கு' என்ற இணைமொழிக்கு ஏற்ற பொருள் யாது?
அருகில்
மகிழ்வும் துயரமும்
பொய்யான காரணம்
அரியதும் பெரியதும்
கீழ்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
வாழ்க்கையில் வெற்றி பெற்ற அனைவரும் பல ________________ கடந்துதான் வந்திருப்பார்கள்.
அக்கம் பக்கம்
அரிய பெரிய
கால நேரம்
இன்ப துன்பம்
'விவேக சிந்தாமணி' செய்யுள் தொடங்கும் அடி யாது
புத்திமான் பலவா னாவான்...
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று
சீத மதிக்குடைக்கீழ்...
என்னோடு போந்த இளங்கொடி...
'புத்திமான் பல னாவான்' என்ற செய்யுளின் கருத்து யாது?
ஆற்றலுள்ளவன் அறிவில்லாதவன்
அறிவுள்ளவனே ஆற்றலுடையவன்
புத்தி உள்ளவன் அறிவு உடையவன்
புத்தி உள்ளவன் அறிவு இல்லாதவன்
'நற்பண்புடையவர்களின் நட்புப் பெரும் பயன் தரும்' என்ற கருத்துக்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடு
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா நுழை
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு
இப்படம் உணர்த்தும் பழமொழி யாது?
வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சியது போல
இருதலைக் கொள்ளி எறும்பு போல
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற மிகச் சரியான பழமொழியைத் தேர்ந்தெடு.
இரண்டு மாதங்களுக்குத் தொடர்ந்த கடுமையான காட்டுத் தீயினால் அவ்வூர் மக்கள் ____________________________ பல உடல்நலச் சிக்கல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
நீர் மேல் எழுத்து போல
நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல
இருதலைக் கொள்ளி எறும்பு போல
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
ஓர் எழுவாய் பல எழுவாய்களோ பல பயனிலைகளைக் கொண்டு முடிவது என்ன வகை வாக்கியம்?
தனி வாக்கியம்
தொடர் வாக்கியம்
கலவை வாக்கியம்
வினா வாக்கியம்
நாடு முன்னேற வேண்டும் என்றால், மக்கள் அயராது உழைக்க வேண்டும்.
மேற்காணும் வாக்கியம் எவ்வகையைச் சார்ந்தது?
தனி வாக்கியம்
தொடர் வாக்கியம்
கலவை வாக்கியம்
வினா வாக்கியம்
"நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆத் அளவின்றே - சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே" என்ற குறுந்தொகை பாடலின் சாரம் யாது
நட்பின் ஆழம்
அன்பின் இனிமை
காதலின் மேன்மை
கருணையின் உச்சம்
குறுந்தொகை பாடலில் இடம்பெற்ற கீழ்க்காணும் சொல்லின் பொருள் யாது?
"பெருந்தேன் இழைக்கும்"
கரிய கிளைகள்
மலைச்சாரலில் மலரும் குறிஞ்சிப் பூ
தேனைக் கொண்டு தேனடைகளைக் கட்டும் தேனீக்கள்
பூமியைவிடப் பெரியது
குறுந்தொகை பாடல் எந்தக் காலத்தில் எழுதப்பட்ட நூல்?
சங்க காலம்
சங்க மறுவிய காலம்
இடைக் காலம்
தற்காலம்
'"சாயம் வெளுத்தது" என்ற மரபுத்தொடரின் பொருள் யாது?
அதிகம் தெரிந்திருந்தும் அடக்கமாக இருத்தல்
உண்மை வெளிப்படுத்தல்
முட்டாளாக்குதல்
ஊக்கப்படுத்துதல்
கீழ்க்காணும் வாக்கியத்தில் காலியான இடத்திற்கு ஏற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடு
நீச்சல் போட்டியில் பங்கேற்க அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த தன் மகனைக் கேசவன் __________________
நிறை குடம்
சாயம் வெளுத்தது
காதில் பூ வைத்தார்
தட்டிக் கொடுத்தார்
