Worksheetsஅறிவியல் ஆண்டு 4-6
Total questions: 15
Worksheet time: 11mins
பின்வரும் நுண்ணுயிரிகளில் எது மிகச் சிறிய அளவைக் கொண்டுள்ளது?
நச்சியம்
குச்சியம்
பூஞ்சணம்
புரோட்டோ சோவா
படத்தில் காணப்படும் பறவையின் அலகு வளைந்து உள்ளது. இப்பறவை எதை உணவாக உட்கொள்ளும்?
தேன்
பழம்
பூச்சி
எலி
படம் ஒரே வாழிடத்தில் வாழக்கூடிய இரண்டு விலங்குகளைக் காட்டுகிறது. இவ்விரண்டு விலங்குகளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
பரிமாற்று வாழ்வு
கூட்டுயிர் வாழ்க்கை
ஒட்டுண்ணி
வேற்று இணை வாழ்க்கை
மாலதியின் வகுப்பில் சில மாணவர்களுக்குச் சளி மற்றும் இருமல் கண்டிருந்தது. சளி மற்றும் இருமல் தொற்றாமல் இருக்க மாலதி என்ன செய்ய வேண்டும்?
வெந்நீர் அருந்த வேண்டும்
உடற்பயிற்சி செய்ய வேண்டும்
பல் துலக்க வேண்டும்
முகக்கவசம் அணிய வேண்டும்
தாவரம் ஒன்றினைக் காட்டுகிறது. இத்தாவரம் கடுமையான வெயிலில் இருந்து எவ்வாறு தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது?
இலைகளை உதிர்த்தல்
இலைகளை கிழித்துக் கொள்ளல்
மெழுகு போன்ற இலைகள்
தடித்த, மென்மையான தண்டு
படத்தில் உள்ள கருவி தற்போது பயன்பாட்டில் இல்லை. காரணம் என்ன?
அக்கருவியைத் தயாரிப்பதில்லை
அக்கருவியை எவரும் பயன்படுத்தவில்லை
சமையல் வேலைக்கு அது உதவவில்லை
மாற்றுக் கருவிகள் வேலைகளை மேலும் எளிமையாக்கின
ஆகாயத்தில் தோன்றக்கூடிய ஒரு நிகழ்வைக் காட்டுகிறது. அப்பொருளுக்கு வால் பகுதியும் தலைப் பகுதியும் உள்ளது.அப்பொருள் யாது?
வால் நட்சத்திரம்
எரி நட்சத்திரம்
விண்மீன் குழுமம்
விண் கற்கள்
சந்திரனின் மேற்பரப்பின் தோற்றத்தைக் காட்டுகிறது. கீழ்க்காணும் தகவல்களில் எது சந்திரனின் மேற்பரப்பைப் பற்றிய தவறான கூற்று?
வறட்சியாக இருக்கும்
எரிமலைகளைக் கொண்டிருக்கும்
முகவாய்களைக் கொண்டிருக்கும்
புவி ஈர்ப்புச் சக்தியைக் கொண்டிருக்கும்
இவற்றுள் எந்தப் பொருள் மின்கடத்தியாகும்?
உலோகக் கரண்டி
கண்ணாடிப் பாத்திரம்
நொய்வ வளையம்
பலகை அளவுகோல்
ரொட்டி செய்ய பயன்படும் நுண்ணுயிர் எது?
ஓரணு உயிர்
நொதிமம்
நச்சியம்
குச்சியம்
பரப்பளவைக் கண்டுபிடிக்கச் சுலபமான வழி எது?
பளிங்கு கற்களைக் கொண்டு எண்ணுவது
சதுரங்களை வரைந்து பிறகு எண்ணுவது
நீளத்தையும் அகலத்தையும் பெருக்குவது
கை விரல்களைக் கொண்டு அளப்பது
கடின இயந்திரம் என்றால் என்ன?
இணைந்த கம்பிகள் போன்றது.
நெம்புகோல் போன்ற வடிவத்தை உடையது
கடினமான வேலைகளைச் செய்ய உதவுவது
ஒன்றிற்கும் மேற்பட்ட எளிய இயந்துரங்களைக் கொண்டது
படம் விறகு எரித்தலைக் குறிக்கின்றது. இந்த நிகழ்வு எந்தத் துறையின் ஆரம்ப நிலையாகும்?
போக்குவரத்து
தொடர்பு
வேளாண்மை
கட்டுமானத் துறை
பின்வருவனவற்றுள் எது ஒளியை நன்கு பிரதிபலிக்கும்?
முகம் பார்க்கும் கண்ணாடி
கண்ணாடி
தொலை நோக்காடி
மூக்குக் கண்ணாடி
பின்வருவனவற்றுள் எது போராட்டத்தை ஒட்டிய தவறான கூற்று?
இயற்கையின் சமநிலையை நிலை நாட்டுவதற்கு.
உணவு மூலம் குறையும் போது ஏற்படும் போராட்டம்
வாழிடத்தில் உயிரினங்களின் எண்ணிக்கையை நிலை நிறுத்துவதற்கு
ஒரே வகை விலங்குகளிடையே ஏற்படும்.
