NEW
Font size
Worksheets31.08.2020 - GRADE 6 - தமிழ்
Total questions: 20
Worksheet time: 10mins
1.'ஓய்வற - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) ஓய்வு + அற
(ஆ) ஓய்+அற
(இ)ஓய்+வர
(ஈ) ஓய்வ +அற
2.ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
(அ) எனென்று
(ஆ)ஏனென்று
(இ)என்னென்று
(ஈ)ஏனன்று
3.மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருவது ....................
( அ)ஊக்கமின்மை
(ஆ)அறிவுடை மக்கள்
(இ)வன்சொல்
(ஈ)சிறிய செயல்
4.ஒருவருக்கு சிறந்த அணி
(அ)மாலை
(ஆ)காதணி
(இ)இன்சொல்
(ஈ) வன்சொல்
5.ஒளடதம் +ஆம் - என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ......................
(அ)ஒளடதமாம்
(ஆ)ஒளடதம் ஆம்
(இ)ஒளடதாம்
(ஈ)ஒளடத ஆம்
6.உடல் நோய்க்கு ...........................தேவை.
(அ)ஒளடதம்
(ஆ)இனிப்பு
(இ)உணவு
(ஈ)உடை
7.நண்பர்களுடன் ..................... விளையாடு.
(அ)ஒருமித்து
(ஆ)மாறுபட்டு
(இ)தனித்து
(ஈ)பகைத்து
8.'ஒளடதம்' என்னும் சொல்லின் பொருள் .......................
(அ)உடை
(ஆ)உணவு
(இ)மருந்து
(ஈ)வீடு
9.'அறிவியல் ஆத்திச்சூடி' என்னும் கவிதைப்பேழையை இயற்றியவர் ............
(அ)நெல்லை.சு.முத்து
(ஆ)ஒளவையார்
(இ)பாரதியார்
(ஈ)கவிமணி.தேசிக விநாயகம்
10.ஐயம் - என்னும் சொல்லின் எதிர்ச்சொல்...................
(அ)பொய்மை
(ஆ) ஊக்கம்
(இ)சோர்வு
(ஈ)தெளிவு
11.'விண்வெளி' - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது................................
(அ)விண்+வளி
(ஆ) விண்+வெளி
(இ)விண்+ஒளி
(ஈ) விண் + வொளி
12.நீலம் +வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.................................
(அ) நீலம்வான்
(ஆ)நீளம்வான்
(இ)நீலவான்
(ஈ)நீலவ்வான்
13.செயற்கைகோள் .................... உதவுகிறது.
( அ)செய்தித்தொடர்பிற்கு
(ஆ)எந்திரத்திற்கு
(இ)விண்ணுக்கு
(ஈ)விளையாட
14..................... வலையால் உலகம் முழுமையும் உள்ளங்கையில் கொடுக்கின்றான்.
(அ)சிலந்தி
(ஆ)தொலைக்காட்சி
(இ)இணைய
(ஈ) மீன்
15.இல்லாது+இயங்கும் - என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ..............................
(அ)இல்லாதுஇயங்கும்
(ஆ)இல்லாஇயங்கும்
(இ)இல்லாதியங்கும்
(ஈ)இல்லாயங்கும்
16.நாளைய மனிதன் ......................... எல்லாம் நகரம் அமைப்பர்.
(அ)நகரில்
(ஆ)ஊரில்
(இ)கோள்களில்
(ஈ)பூமியில்
17.'இயன்றவரை ' என்னும் சொல்லின் பொருள் .......................
(அகொடுக்கும் வரை
(ஆ)முடிந்தவரை
(இ)தரும் வரை
(ஈ)செல்லும் வரை
18.ஊக்கம் - என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ...........
(அ)பொய்மை
(ஆ) விலகு
(இ)சோர்வு
(ஈ)தெளிவு
19.அணுகு - என்னும் சொல்லின் எதிர்ச்சொல்........................
(அ)பொய்மை
(ஆ) விலகு
(இ)சோர்வு
(ஈ)தெளிவு
20. எலும்பும் தசையும் இல்லாது மனிதனைப் போன்ற தோற்றத்துடன் இயங்குவது .............
(அ)இணையம்
(ஆ)கணினி
(இ)ரோபோ
(ஈ)மனிதன்
