NEW
Font size
Worksheetsஇலக்கியம்
Total questions: 20
Worksheet time: 11mins
'கடுக்காய் கொடுத்தல்'
கொடுக்கப்பட்ட மரபுத் தொடரின் பொருள் என்ன?
அவமானப் படுத்துதல்
பொய் கூறுதல்
ஏமாற்றித் தப்புதல்
உதவுதல்
இவற்றுள் சரியான இரட்டைக்கிளவியைக் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
அப்பா தனது வேலைகளை மடமடவென செய்து முடித்தார்.
குறும்பு செய்த யாழினியை அமுதன் தடதடவென இழுத்துச் சென்றான்
வெளியே விளையாடிக் கொண்டிருந்த இனியன் தன் அப்பாவைக் கண்டதும் குடுகுடுவென ஓடி மறைந்தான்.
சரசரவெனும் ஓடும் நதியைப் பார்த்து அம்மா உள்ளம் மகிழ்ந்தார்.
'ஒருவருக்கு அழிவில்லாத செல்வம் யாதெனில் கல்விச் செல்வமேயாகும். மற்றவைகள் யாவும் செல்வமாக கருதப்படாது'.
மேற்கண்ட விளக்கத்திற்கேற்புடைய சரியான திருக்குறளைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்ற யவை
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
இப்படத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தேர்ந்தெடு
ஆண்மை தவறேல்
ஓய்தல் ஒழி
அச்சம் தவிர்
ஒற்றுமை வலிமையாம்
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்காறு இயன்றது அறம்
இத்திருக்குறளில் வள்ளுவர் உரைக்கும் நான்கு இழுக்குகள் யாவை?
பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல்
பொறாமை, கோபம், கடுஞ்சொல், பொய்யுரைத்தல்
பேராசை, கோபம், கடுஞ்சொல், செருக்கு
பொறாமை, பிடிவாதம், கோபம், கடுஞ்சொல்
கண்ணகி கோவலன் இறந்ததைக் கேட்டு ______________________ துடித்தாள்
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
அனலிலிட்ட மெழுகு போல
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
கண்ணினைக் காக்கும் இமை போல
சரியான மரபுத்தொடரைக் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆசிரியர் கற்றுக் கொடுத்தப் பாடத்தை வளர்மதி தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொண்டாள்.
அனைவருக்கும் கடுக்காய் கொடுத்த செந்தாழையை அனைவரும் பாராட்டினர்.
எல்லா பாடங்களையும் கரைத்துக் குடித்த கோகிலம் தேர்வில் தோல்வியுற்றாள்.
உலக நடப்புகளை விரல் நுனியில் அறிந்து வைத்திருக்கும் குமரனைக் கிணற்றுத் தவளையென்று அனைவரும் பாராட்டினர்.
நம் நாட்டு மக்கள் ____________ என்பதை உணர்ந்து வாழ்ந்தால், நாடு அரசியல், பொருளாதாரம் என எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அடையும்.
ஈகை திறன்
ஏறுபோல் நட
ஆண்மை தவறேல்
ஒற்றுமை வலிமையாம்
ஔடதம் குறை
எடுத்தற்கெல்லாம் மருந்து உட்கொள்ள வேண்டும்
எடுத்தற்கெல்லாம் மருந்து உட்கொள்ளாமல் தவிர்க்க வேண்டும்
எடுத்தற்கெல்லாம் மருந்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்
எடுத்தற்கெல்லாம் மருந்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டாம்
இப்படத்திற்குப் பொருத்தமான புதிய ஆத்திசூடியைத் தேர்ந்தெடுக்கவும்
உடலினை உறுதி செய்
ஊண்மிக விரும்பு
இளைத்தல் இகழ்ச்சி
ஔடதம் குறை
இப்படத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
'மெய்வருத்தம் பாரார்' என்பதன் பொருள் என்ன?
உண்மையைப் பொருட்படுத்த மாட்டார்
எதைப் பற்றியும் கவலைக் கொள்ள மாட்டார்
உடலையும் நோயையும் பொருட்படுத்த மாட்டார்
வருத்தம் கொள்ள மாட்டார்
ஆத்திசுடியை இயற்றியவர் யார்?
பாரதியார்
ஔவையார்
வள்ளலார்
அதிவீரராமபாண்டியர்
கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த தங்க கிரீடம் ______________ என்று மின்னியது.
தகதக
பளபள
மினுமினு
கிலுகிலு
மாலதி தான் சிறு வயதில் கற்ற மலாக்கா சரித்திரம் இன்னும் மனதிலே மறையாது ஞாபகத்தில் இருப்பதாகத் தன் அம்மமவிடம் அடிக்கடிக் கூறுவாள்.
'சிறு சிறு நோய்களுக்கு மருந்து உட்கொள்வது பாதிப்பை உண்டாக்கும்.'
இக்கருத்துக்கு ஏற்ற செய்யுளின் படத்தைத் தேர்வு செய்க.
இப்படம் உணர்த்தும் புதிய ஆத்திசூடி யாது?
ஒளடதம் குறை
ஐம்பொறி ஆட்சிகொள்
உடலினை உறுதி செய்
படத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
பழக்க வழக்கம்
தாயும் சேயும்
ஆடல் பாடல்
தாயார் பலமுறை அறிவுரை கூறியும் கோபாலன் பலத்த மழையிலும் பந்து விளையாட்டுக்குச் செல்ல முடிவெடுத்தான்.
சூழலுக்கேற்ற பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
மனப்பால் குடித்தல்
செவி சாய்த்தல்
கம்பி நீட்டுதல்
குரங்குப் பிடி
இப்படத்திற்குப் பொருத்தமான மரபுத்தொடர் யாது?
மனப்பால் குடித்தல்
கங்கணம் கட்டுதல்
முழு மூச்சு
வெளுத்து வாங்குதல்
