wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 6

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

படத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைக் கண்டறிக.

a)

கடகட

b)

கிடுகிடு

c)

மடமட

d)

சரசர

2.

கீழ்க்காணும் வாக்கியத்திற்குப் பொருத்தமான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.


இன்று முகிலன் புத்தகக் கண்காட்சிக்கு வரவில்லை. __________________ நாளை கண்டிப்பாக அழைத்து வருவேன்.

a)

ஆயினும்

b)

ஏனென்றால்

c)

ஏனெனில்

d)

இன்னும்

3.

கீழ்க்காணும் எழுத்துப் பட்டியல் எதைக் குறிக்கின்றது?


அ, இ , உ

a)

வினா எழுத்து

b)

மெய் எழுத்து

c)

நெட்டெழுத்து

d)

சுட்டெழுத்து

4.

வாக்கியத்தில் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வேற்றுமை உருபு சொற்களைத் தெரிவு செய்க.


_______________ நேற்று _________________ நிறைய _______________ பிடித்தார்.

a)

மீனவர், ஆறு, மீன்களைப்

b)

மீனவரது, ஆற்றை, மீனைப்

c)

மீனவர், ஆற்றில், மீன்களைப்

d)

மீனவரின், ஆற்றில், மீனுக்குப்

5.

கீழ்க்காணும் நல்வழி செய்யுளடிகளை நிரல்படுத்துக.


I ஆனமுதலில் அதிகஞ் செலவானால்

II நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

III எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்

IV மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை

a)

I, II, IV, III

b)

I, IV, III, II

c)

I, II, III, IV

d)

II, I, III, IV

6.

தோன்றல் விகாரத்தைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க.

a)

கல் + தூண் = கற்றூண்

b)

கண் + இமை = கண்ணிமை

c)

செம்மை + கோல் = செங்கோல்

d)

தெற்கு + மேற்கு = தென்மேற்கு

7.

கொடுக்கப்பட்ட வாக்கியம் எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது?


மன்னா! நீதி தவறாத உமது ஆட்சி உலகெங்கும் புகழ்பெற எமது வாழ்த்துகள்.

a)

வினா வாக்கியம்

b)

விழைவு வாக்கியம்

c)

செய்தி வாக்கியம்

d)

உணர்ச்சி வாக்கியம்

8.

சரியான இரண்டு செயப்பாட்டுவினை வாக்கியங்களைத் தெரிவு செய்க.

a)

கவிதை தேவியால் பாடப்பட்டது.

b)

அந்த ஓவியம் கவினால் வரையப்பட்டது.

c)

விஷால் பள்ளிப் போட்டி விளையாட்டில் கலந்து கொண்டான்.

d)

அம்மா சந்தைக்குச் சென்று பழங்கள் வாங்கி வந்தார்.

9.

கீழ்க்காண்பனவற்றுக்குப் பொருத்தமான இலக்கண விதியைத் தெரிவு செய்க.


ஓடி + தாண்டினான் = ஓடித் தாண்டினான்

a)

அகர, இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வலிமிகும்.

b)

வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும்.

c)

ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வலிமிகும்.

d)

நான்காம் வேற்றுமை உருபு (கு)க்குப் பின் வலிமிகும்.

10.

கொடுக்கப்பட்ட சூழலுக்கு எதிர்மறையான பழமொழியைத் தெரிவு செய்க. (KBAT)


சிறுவயதில் அண்ணன் செய்த உதவியை மாறன் இன்று மறந்துவிட்டான்.

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

b)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

c)

இளமைக் கல்வி சிலையில் எழுத்து

d)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

11.

மனிதர், தேவர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லார்க்கும் நல்லதைத் தருகின்ற கருணையாளன் இறைவன்.

a)

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே

b)

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே

c)

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே

d)

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

12.

கீழ்க்காணும் படம் உணர்த்தும் உலகநீதியைத் தேர்ந்தெடுக.

a)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.

b)

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.

c)

நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்.

d)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்.

13.

கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கேற்ற செய்யுள் அடியைத் தெரிவு செய்க.

தாமரை மலர்களிலுள்ள தேனை உறிஞ்ச வண்டுகள் ரீங்காரமிடும் குளிர்ச்சியான தடாகம் போல்

a)

மாசில் வீணையும் மாலை மதியமும்

b)

வீசு தென்றலும் வீங்(கு)இள வேனிலும்

c)

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

d)

ஈசன் எந்தை இணைய்டு நீழலே

14.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் படர்க்கைச் சொல் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

நீங்கள் மாம்பழம் பறித்தீர்களா?

b)

சுமதி மலர்களை மாலையாகத் தொடுத்தாளா?

c)

நான் சாலை ஓரத்தில் விளையாடலாமா?

d)

உங்கள் நாட்டின் மீது எதிரிகள் படையெடுக்கின்றனரா?

15.

கொடுக்கப்பட்ட இலக்கண விதிக்குப் பொருத்தமான விடைகளைத் தெரிவு செய்க.


வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும்.

a)

தேடிச் சென்றான்

b)

மூச்சுப் பயிற்சி

c)

போய்ப் பார்த்தான்

d)

பட்டுப் புடவை