wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

GRADE 10 A பாடலைப் படித்து விடையளி

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

நும்இல் போல நில்லாது புக்கு , கிழவிர் போலக் கேளாது கெழீஇ - பாடலின் தலைப்பு?

a)

காசிக்காண்டம்

b)

நீதி வெண்பா

c)

மலைபடுகடாம்

d)

முல்லைப் பாட்டு

2.

எமது உயிர் - நெருப்பை நீடித்துநின்று நல்லொளி தருமாறு நன்றாக வீசு - பாடலின் ஆசிரியர் யார்?

a)

நப்பூதனார்

b)

கீரந்தையார்

c)

குலசேகர ஆழ்வார்

d)

பாரதியார்

3.

வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை - 'ஆடுக' இலக்கணக் குறிப்பு தருக

a)

எண்ணும்மை

b)

பெயரெச்சம்

c)

வியங்கோள் வினைமுற்று

d)

பண்புத்தொகை

4.

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை - பாடலின் தலைப்பு

a)

திருவிளையாடற் புராணம்

b)

காசிக்காண்டம்

c)

பெருமாள் திருமொழி

d)

நீதிவெண்பா

5.

விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக் கரு வளர் வானத்து இசையில் தோன்றி, விசும்பு - பொருள்?

a)

வானம்

b)

மேகம்

c)

காற்று

d)

உலகம்

6.

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் - மாளாத = பொருள்?

a)

நீங்கும்

b)

தீராத

c)

போகாத

d)

நிலையான

7.

முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால் மெத்த வணிகலமும் மேவலால் - நித்தம் - பாடலின் தலைப்பு

a)

அன்னை மொழியே

b)

முல்லைப் பாட்டு

c)

கற்றே வா

d)

இரட்டுற மொழிதல்

8.

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள் - பாடலின் ஆசிரியர்

a)

நப்பூதனார்

b)

பெருஞ்சித்திரனார்

c)

பாரதிதாசன்

d)

கம்பர்

9.

எப்படித் தொடுக்க நான் - ஒருவேளை, என் மனமே நூலாகும் நுண்மையுற்றாலொழிய - பாடலின் ஆசிரியர் யார்?

a)

சுரதா

b)

உமா மகேஸ்வரி

c)

தாமரை

d)

ரமா மகேஸ்வரி

10.

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான் ஒழுக்கமும் வழிபடும் பண்பே - பாடலின் ஆசிரியர்

a)

அதிவீரராம பாண்டியர்

b)

பெருங்கெளசிகனார்

c)

நப்பூதனார்

d)

கபிலர்