Font size
Worksheetsபழமொழி
Total questions: 10
Worksheet time: 5mins
இன்றைய பாடத்தில் கற்பிக்கப்பட்ட பழமொழியினைத் தெரிவு செய்க.
ஊருடன் கூடி வாழ்
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
அழுத பிள்ளை பால் குடிக்கும்
மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்
'அழுத பிள்ளை பால் குடிக்கும்' எனும் பழமொழியினை உணர்த்தும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அகிலன் சோம்பல் குணம் மிகுந்தவன்.
மாலதி வகுப்பில் அமைதியாகவே இருப்பாள்.
சிவா தனக்குப் பிடித்த கதை புத்தகத்தை வாங்க கொஞ்சம் கொஞ்சமாகப் பணத்தைச் சேமித்து வைத்தான்.
'அழுத .......................... பால் ...........................'.
சரியான இரண்டு விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
குடிக்கும்
ஊர்
பிள்ளை
வேண்டாம்
அழுத பிள்ளை பால் குடிக்கும் எனும் பழமொழியின் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
'அழுத பிள்ளை பால் குடிக்கும்' எனும் பழமொழியினை உணர்த்தும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
வீணை மீட்டுவதில் நாட்டம் கொண்டிருந்த விமலன் காணொளிகளைப் பார்த்து வீணை மீட்ட பழகி கொண்டான்.
திரு முகுந்தன் குடும்ப பொறுப்புகளை ஏற்க தவறினார்.
'அழுத பிள்ளை பால் குடிக்கும்' எனும் பழமொழியினை உணர்த்தும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அனுஷா கலகலவென சிரித்தாள்.
தாமரை தனக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பாள்.
கவிதாவின் தாயார் அவளைக் கூடுதல் வகுப்பிற்கு அனுப்ப பல வேலைகளைச் செய்து பணத்தைத் திரட்டினார்.
'அழுத பிள்ளை பால் குடிக்கும்' எனும் பழமொழியினை உணர்த்தாத வாக்கியத்தைத் தெரிவு செய்க.
கவிதா கணித பாடத்தில் ஐயம் இருந்த போதிலும் அச்சத்தின் காரணத்தால் ஆசிரியரிடம் கேட்கவில்லை.
அன்பரசன் தேர்வினைச் சிறப்பாகச் செய்யும் நோக்கில் கூடுதல் பயிற்சிகளைச் செய்தான்.
ஒவ்வொருவரும் தமக்கு ............................... பெற்றுக்கொள்ள தாமே ............................ செய்ய வேண்டும்.
வேண்டியவற்றைப், வேண்டும்
பெற்றுக்கொள்ள, முயற்சி
வேண்டியவற்றைப், முயற்சி
'அழுத பிள்ளை பால் குடிக்கும்' எனும் பழமொழியினை உணர்த்தாத வாக்கியத்தைத் தெரிவு செய்க.
குமுதா பலமுறை முயற்சித்து இறுதியில் ஒரு சிறந்த பாடகியானாள்.
மேற்கல்வியைத் தொடர எண்ணம் கொண்டிருந்த போதிலும் அகிலன் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டான்.
'அழுத பிள்ளை பால் குடிக்கும்' எனும் பழமொழியினை உணர்த்தாத வாக்கியத்தைத் தெரிவு செய்க.
தமயந்தி ஆசிரியர் பாடம் போதிக்கும் பொழுது கவனம் செலுத்தமாட்டாள்.
குமுதன் அறிவியல் பாடத்தில் ஏற்பட்ட சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டுத் தெளிந்தான்.
