wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

10th tamil ilakanam

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

திணை எத்தனை வகைப்படும்?

a)

இரண்டு

b)

நான்கு

c)

மூன்று

d)

ஆறு

2.

பால் எத்தனை வகைப்படும்?

a)

ஏழு

b)

எட்டு

c)

மூன்று

d)

ஐந்து

3.

எது அஃறிணை?

a)

ஆண்பால்

b)

ஒன்றன்பால்

c)

பெண்பால்

d)

பலர் பால்

4.

எது உயர்திணை?

a)

யானை

b)

புறா

c)

வீரன்

d)

மலை

5.

மக்கள் -இச்சொல்லின் பால் பகுப்பு

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலர்பால்

d)

ஒன்றன் பால்

6.

இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் ................எனப்படும்

a)

வழாநிலை

b)

வழு

c)

வழுவமைதி

d)

மூவிடம்

7.

இலக்கணமுறையின்றிப் பேசுவதும் எழுதுவதும்..........

எனப்படும்.

a)

வழு

b)

வழாநிலை

c)

வழுவமைதி

d)

திணை

8.

என் அம்மை வந்தாள் -என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது

a)

பால் வழுவமைதி

b)

திணைவழுவமைதி

c)

இட வழுவமைதி

d)

கால வழுவமைதி

9.

வாடா இராசா -என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது

a)

பால் வழுவமைதி

b)

திணைவழுவமைதி

c)

வழு

d)

வழாநிலை

10.

நான், யான்,நாம்,யாம் என்பன

a)

தன்மைப் பெயர்கள்

b)

முன்னிலைப்பெயர்கள்

c)

படர்க்கைப் பெயர்கள்

d)

மரபு

11.

கீழ்வரும் சொற்களில் எது பலவின்பால்?

a)

ஆடவர்

b)

கல்

c)

அரசி

d)

மலைகள்

12.

கீழுள்ளவற்றுள் எது திணை வழு?

a)

செழியன் வந்தது

b)

நீ வந்தேன்

c)

மக்கள்

d)

மன்னன்

13.

கீழுள்ளவற்றுள் எது பால் வழு?

a)

செழியன் வந்தான்

b)

நேற்று வருவான்

c)

கண்ணகி உண்டான்

d)

தென்னை

14.

கத்துங் குயிலோசை என்பது

a)

மரபு வழுவமைதி

b)

பால் வழுவமைதி

c)

திணை வழுவமைதி

d)

கால வழுவமைதி

15.

இரு விரல்களைக் காட்டி எது சிறியது? எது பெரியது? என்று கேட்பது...

a)

வழாநிலை

b)

வழு

c)

வழுவமைதி

d)

இடம்

16.

கீழுள்ளவற்றுள் எது சரி?

a)

தென்னந்தோட்டம்

b)

தென்னந்தோப்பு

c)

தென்னைக்கூட்டம்

d)

தென்னைசெடி

17.

எது பெண் பால்?

a)

அண்ணன்

b)

மகள்

c)

கிளி

d)

பலகை

18.

நீ,நீர், நீவிர், நீங்கள் போன்றவை

a)

முன்னிலைப் பெயர்கள்

b)

முன்னிலை வினைகள்

c)

படர்க்கை

d)

தன்மை

19.

தன்மை ,முன்னிலை ,படர்க்கை=?

a)

வழுவமைதி

b)

வழு

c)

மூவிடம்

d)

திணை

20.

ஆறறிவு உடைய மக்கள்

a)

உயர்திணை

b)

அஃறிணை

c)

மரபு

d)

தன்மை