NEW
Font size
Worksheetsதமிழ்மொழி
Total questions: 15
Worksheet time: 8mins
'வையம்' எனும் சொல்லின் பொருளைத் தேர்ந்தெடு
பாடல்
உலகம்
கடல்
காலை
கீழ்க்காணும் வாக்கியத்தில் பயனிலையை அடையாளங்காண்க.
மதியழகி மல்லிகை மலர்களைப் பறித்தாள்.
மதியழகி
மல்லிகை
பறித்தாள்
மலர்களைப்
கீழ்க்காணும் வாக்கியங்களில் வேற்றுமை உருபைக் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
தம்பி தண்ணீர் குடித்தான்.
அப்பா பழத்தைக் கடித்துச் சாப்பிட்டார்.
அம்மா துணி வாங்கினார்.
புகழ் பாடல் பாடினான்.
இவற்றில் எந்த மொழி செம்மொழியல்ல?
தமிழ்மொழி
சீன மொழி
மலாய்மொழி
இலத்தீன்
ஏழு தலைமுறை என்பது எத்தனை வருடங்களாகும்?
நானூற்று இருபது ஆண்டுகள்
எழுநூற்று பத்து ஆண்டுகள்
அறுபது ஆறு ஆண்டுகள்
எண்பது ஆண்டுகள்
அண்டை அயலார் எனும் இணைமொழியின் பொருள் என்ன?
எந்தக் காலத்திலும்
அக்கம் பக்கத்தார்
பக்கத்தில் நிற்பவர்
ஆபத்தில் உதவுபவர்
எட்டாம் வேற்றுமையைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
அகிலாவிடம் பல கதைப் புத்தகங்கள் உள்ளன.
பழம் மரத்தினின்று விழுந்தது.
அப்பாவின் மகிழுந்து நீல நிறம்.
காவியா! இங்கே வா.
ஆறாம் வேற்றுமையைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடு.
குதிரைக்கு
முருகா!
அத்தையுடைய
வள்ளியின்
ஒரு துறையைச் சார்ந்து இருக்க எண்ணங்கொண்டவர்கள் அத்துறையில் பிறர் புகழும்படியாகச் சிறந்து விளங்க வேண்டும். இல்லையேல் அத்துறையில் ஈடுபடாதிருத்தல் நல்லது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடு.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார் பொருத்தல் தலை.
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
ஞாலங் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
ஆடுகள் இலை _________________களைத் தின்றன.
பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடு.
அலகு
அழகு
தலை
தழை
ஆனமுதலில் அதிகஞ் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
___________________________________________________________
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு
விடுபட்ட வரியைத் தேர்ந்தெடு.
அல்லனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்
கள்ளனாய் ஏழ்பிறப்புந்
எல்லார்க்கும் அல்லனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்
மாரி எனும் சொல்லின் பொருளைத் தேர்ந்தெடு
மண்
மழை
தோழன்
வலி
அங்கு + சென்றான் =
சேர்த்தெழுதுக
அங்குசென்றான்
அங்சென்றான்
அங்குச்சென்றான்
இங்குச்சென்றான்
கல்விக் கழகு கசடற மொழிதல்
எனும் வெற்றி வேற்கையின் பொருளைத் தேர்ந்தெடு.
பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு.
பிழையில்லாமல் பேச வேண்டும்
நன்கு கல்வி கற்க வேண்டும்
நன்றாகப் பேச வேண்டும்
அம்மா வாங்கிய வெள்ளிப் பாத்திரங்கள் ______________________வென மின்னின.
தக தக
சர சர
கடு கடு
பள பள
