wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மதிப்பீடு(தமிழ்மொழி)

Total questions: 20

Worksheet time: 2hrs 40mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.


அம்மா : நாதனோடு நீ நட்பு கொண்டிருப்பது எனக்குப் பிடிக்கவில்லை பாலா.

பாலா : ஏனம்மா அப்படிச் சொல்கிறீர்கள்?அவன் நல்லவந்தானே?

அம்மா : அவன் நல்லவனோ கொட்டவனோ எனக்குத் தெரியாது. ஆனால், அவன் தீயவர்களுடன் நட்பு கொண்டிருப்பதைக் கேள்வியுற்றேன்.

a)

மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்

b)

நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்

c)

வஞ்சனைகள் செய்வரோ டிணங்க வேண்டாம்

d)

அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்

2.

கீழ்க்காணும் வெற்றி வேற்கையின் பொருளைத் தெரிவு செய்க.


(கல்விக் கழகு கசடற மொழிதல்)

a)

பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு

b)

பணக்காரர்களுக்குச் சிறப்பு சுற்றியுள்ள உறவினர்களை ஆதரித்தல் ஆகும்.

c)

உயர்வும் தாழ்வும் அவரவர் செயலுக்கு ஏற்பவே அமையும்.

3.

கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.


தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழ முடியாதவர் தம்மைத் தாமே நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்வதால் பயனில்லை.

a)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்

b)

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து

c)

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மடல்ல மற்றை யவை

d)

புகழ்பட வாழாதார் தந்தோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்

4.

கீழ்க்காணும் பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.

( இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து)

a)

இளமையில் கற்பது போல முதுமையில் கற்க முடியாது

b)

இளமையில் கற்கும் கல்வி அழியாமல் நிலைத்திருக்கும்

c)

இளைமையில் கற்றால் மட்டுமே கற்றது நினைவிலிருக்கும்

d)

இளைமையில் கற்றது நிலைக்க சிலைமேல் எழுத வேண்டும்

5.

கீழ்க்காணும் மூதுரையின் முதலடியைத் தெரிவு செய்க

( தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரை)

a)

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

b)

அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணி

c)

நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி

d)

தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறகூறும்

6.

கொடுக்கப்பட்டுள்ள நாலடியாரில் பயன்படுத்தப்பட்ட உவமைகள் யாவை?

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்

_______________________________________________________

____________________________________________________

a)

தென்னை , தலை

b)

வீணை , சந்திரன் , தாமரை

c)

நெல் , நீர் , பூ

d)

தென்னை, வீணை , நெல்

7.

நல்வழியில் விடுபட்டுள்ள அடியை நிறைவு செய்க.


ஆன முதலில் அதிகஞ் செலவானால்

மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை

எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்

_____________________________________________________

a)

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

b)

கருமமே கண்ணாயினர்

c)

நலங்கொடுக்கும் நலமே

8.

'எந்தக் காலத்திலும்' எனும் பொருளைக் குறிக்கும் இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

இன்ப துன்பம்

b)

ஆதி அந்தம்

c)

அல்லும் பகலும்

d)

அன்றும் இன்றும்

9.

உரையாடலுக்குப் பொருத்தமான உவமைத் தொடரைத் தெரிவு செய்க.


அகிலன்: முகிலா, உன் அப்பாவிற்கா ஒரு கோடி

பரிசு விழுந்தது?

முகிலன் : ஆ! அதற்குள் உனக்குத்

தெரிந்துவிட்டதா !

a)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

b)

காட்டுத் தீ போல

c)

இலை மறை காய் போல

d)

சூரியனைக் கண்ட பனி போல

10.

கீழ்க்காணும் காலியிடத்திற்குப் பொருத்தமான இரட்டைக் கிளவியைத் தெரிவு செய்க.


அம்மா வாங்கிய பாத்திரம் ____________வென

மின்னியது

a)

மடமட

b)

தடதட

c)

பளபள

d)

சரசர

11.

வல்லின மெய்யெழுத்தைக் கொண்டிராத சொல்லைத் தெரிவு செய்க.

a)

அக்காள்

b)

அச்சம்

c)

சிங்கம்

d)

பத்து

12.

கீழ்க்காணும் சொல்லுக்கு ஒரே பொருள் தரும் சொல்லைத் தெரிவு செய்க.

மன்னர்

a)

இறைவன்

b)

சந்திரன்

c)

புலி

d)

வேந்தன்

13.

படம் காட்டும் திணையைத் தெரிவு செய்க.

a)

பன்மை

b)

அஃறிணை

c)

உயர்திணை

d)

தன்மை

14.

சரியான இடைச்சொல்லைப் பயன்படுத்தி இருக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அகிலாவிற்குக் காய்ச்சல் கண்டது. இருப்பினும், அவள் பள்ளிக்கு வரவில்லை.

b)

சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது அனைவரின் கடமையாகும். ஆனால், நாம் ஆரோக்கியமாக வாழலாம்.

c)

கலயரசியை அனைவரும் பாராட்டினார்கள். எனவே, அவள் கோபப்பட்டாள்.

d)

காகத்திற்குத் தாகம் எடுத்தது. ஆகையால், அது தண்ணீரைத் தேடி அங்கும் இங்கும் அலைந்தது.

15.

விடுபட்ட இடத்தில் சரியான நிறுத்தக் குறிகளைத் தெரிவு செய்க.


( " மாலதி ____________ கேமரன் மலை மிகவும் குளிர்ச்சியாக இருக்கக் காரணம் என்ன ___________" என்று வினவினாள் ராணி.

a)

! - ?

b)

? - !

c)

, - ?

d)

, - !

16.

மல்லிகா ஒரு கிணற்றில் பால் ஊற்றி எடுத்து வந்தாள். திடீரென்று கால் இடறியதால் அவளது கையில் இருந்த கிண்ணம் அங்கு அமர்ந்திருந்த முகிலனின் மேல் விழுந்தது. இதனால், அவனுடைய ஆடை நனைந்து விட்டது.


மேற்கண்ட பத்தியில் ஆறாம் வேற்றுமை உருபை ஏற்று வந்துள்ள சொற்கள் யாவை?

a)

கிண்ணத்தில் , அவளது

b)

அவளது , அவனுடைய

c)

கையில் , அவளுடைய

d)

இடறியதால் , கையில்

17.

இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.

a)

அத்தலைவன்

b)

பூச்செடி

c)

ஆணழகன்

d)

எவ்யானை

18.

கீழ்க்காணும் வலிமிகும் விதியைத் தெரிவு செய்க.


எங்கு + சென்றான் = எங்குச் சென்றான்

a)

அந்த, இந்த, எந்த என்னும் சொற்களுக்குப் பின் வலிமிகும்

b)

இரண்டாம் வேற்றுமை உருபுக்குப் பின் வலிமிகும்

c)

அங்கு, இங்கு, எங்கு என்னும் சொற்களுக்குப் பின் வலிமிகும்.

d)

நான்காம் வேற்றுமை உருபுக்குப் பின் வலிமிகும்

19.

பின்வரும் தனி வாக்கியங்களுக்கு ஏற்ற தொடர்வாக்கியத்தைத் தெரிவு செய்க.


கவிதா அழகிய ஓவியம் வரைந்தாள்.

கவிதா வண்ணம் தீட்டினாள்.

a)

கவிதா அழகிய ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டினாள்.

b)

கவிதா வண்ணம் தீட்டுவதற்காக ஓவியம் வரைந்தாள்.

c)

கவிதா ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டினாள்.

d)

கவிதா அழகிய ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டினாள்

20.

கீழ்க்காணும் வாக்கியங்களில் ரகரச் சொல் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

பூனை எலியைத் துறத்தியது

b)

அம்மா அரியை முரத்தில் புடைத்தார்.

c)

அகிலன் கடற்கரையில் மணல் வீடு கட்டினான்.

d)

மாலினி பூக்களைப் பரித்தாள்.