Font size
Worksheets8. செய்யுள் - மெய்ஞ்ஞான ஒளி
Total questions: 9
Worksheet time: 2mins
மனிதர்கள் தம் _________ தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.
அ) ஐந்திணைகளை
ஆ) அறுசுவைகளை
இ) நாற்றிசைகளை
ஈ) ஐம்பொறிகளை
ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் ________.
அ) பகர்ந்தனர்
ஆ) நுகர்ந்தனர்
இ) சிறந்தனர்
ஈ) துறந்தனர்
சுல்தான் அப்துல்காதர் என்னும் இயற்பெயர் கொண்டவர் _________.
அ) பட்டினத்தார்
ஆ) வள்ளலார்
இ) மச்சரேகை சித்தர்
ஈ) குணங்குடி மஸ்தான் சாகிபு
சதுரகிரி, புறாமலை மற்றும் நாகமலை முதலிய பகுதிகளில் தவமியற்றி ஞானம் பெற்றவர் ________.
அ) பட்டினத்தார்
ஆ) வள்ளலார்
இ) மச்சரேகை சித்தர்
ஈ) குணங்குடி மஸ்தான் சாகிபு
'அனந்தவெள்ளம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
அ) ஆனந்த + வெள்ளம்
ஆ) ஆனந்தன் + வெள்ளம்
இ) ஆனந்தர் + வெள்ளம்
ஈ) ஆனந்தம் + வெள்ளம்
'உள் + இருக்கும்' என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ________.
அ) உள்ளேயிருக்கும்
ஆ) உள்ளிருக்கும்
இ) உளிருக்கும்
ஈ) உளருக்கும்
நமது பாடப்பகுதியான மெய்ஞ்ஞானஒளி என்னும் தலைப்பு இடம்பெற்ற நூல் ________.
அ) எக்காளக் கண்ணி
ஆ) மனோன்மணிக் கண்ணி
இ) நந்தீசுவரக் கண்ணி
ஈ) குணங்குடியார் பாடற்கோவை
எப்படியும் வாழலாம் என்பது ________ களின் இயல்பு.
அ) பறவை
ஆ) மரங்
இ) விலங்கு
ஈ) மனிதர்
'பராபரம்' என்னும் சொல்லின் பொருள் _______.
அ) இன்பப்பெருக்கு
ஆ) நீக்கியவர்க்கு
இ) மேலான பொருள்
ஈ) தருவாய்
