NEW
Font size
Worksheetsதமிழ் - அன்னை மொழியே
Total questions: 12
Worksheet time: 6mins
1.அன்னை மொழியே என்ற பாடலை இயற்றியவர்
சந்தக்கவிமணி
பாவலரேறு
பாவாணர்
கால்டுவெல்
2.பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள்
தென்மொழி மற்றும் தமிழ்ச்சிட்டு
ஐயை மற்றும் கனிச்சாறு
பள்ளிப்பறவைகள் மற்றும் மகபுகுவஞ்சி
நுாறாசிரியம் மற்றும் பாவியக்கொத்து
3.பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் ------
துரை.மாணிக்கம்
சண்முக சுந்தரம்
சுப்பு ரத்தினம்
சுப்ரமணியம்
4.அன்னை மொழியே என்ற பாடல் இடம்பெற்றுள்ள நுால்
ஐயை
கனிச்சாறு
தமிழ்த்தாய் வாழ்த்து
முந்துற்றோம் யாண்டும்
5.இருவேறு தலைப்பிலமைந்த பாடல்கள் நம் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. அவை
அன்னை மொழியே மற்றும் முந்துற்றோம் யாண்டும்
தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் முந்துற்றோம் யாண்டும்
தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் அன்னை மொழியே
தமிழன்னை மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து
6.மாண்புகழ் என்ற சொல்லின் பொருள்
கொழுத்த புகழ்
பெரும் புகழ்
நல்ல புகழ்
புகழ்
7.செந்தமிழ் என்பதைப் பிரித்தெழுதுக.
செந் + தமிழ்
செந்த + தமிழ்
செம் + தமிழ்
செம்மை + தமிழ்
8.பத்துப்பாட்டு நுால்கள் என்பவை
பதினெண் கீழ்க்கணக்கில் உள்ளன.
பதினெண் மேற்கணக்கில் உள்ளன.
எட்டுத்தொகையில் உள்ளன.
நீதி நுால்களுள் உள்ளன.
9.மணிமேகலை வடிவே என்பது
அழகான மணிமேகலையே என்று பொருள்படுகிறது.
மணிமேகலை என்று பொருள்படுகிறது.
மணிமேகலைக் காப்பியம் என்று பொருள்படுகிறது.
மணிமேகலை வடிவமே என்று பொருள்படுகிறது.
10.வேறார் என்ற சொல்லின் பொருள்
பகைவர்
பிற மொழியினர்
பிற நாட்டவர்
பிற இனத்தவர்
11.எந்தமிழ்நா - பிரித்தெழுதுக.
எந் தமிழ் நா
என் தமிழ் நா
எம் தமிழ் நா
எந்த தமிழ் நா
12.விந்தை நெடுநிலைப்பு - பொருள்
வியக்கத்தக்க அளவில் நீண்ட காலமாக நிலைத்திருத்தல்
வியப்பு
கன்னித்தமிழாய் இருப்பது
தொன்மை
