NEW
Font size
WorksheetsBahasa Tamil tahun 3
Total questions: 15
Worksheet time: 8mins
சரியான பாலைக் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
திரு.லிம் மீன் குழம்பைச் சுவைத்து உண்டது.
திரு.லிம் மீன் குழம்பைச் சுவைத்து உண்டான்.
திரு.லிம் மீன் குழம்பைச் சுவைத்து உண்டார்.
திரு.லிம் மீன் குழம்பைச் சுவைத்து உண்டாள்.
சரியான எதிர்ச்சொல்லை தேர்ந்தெடுக்க வேண்டும்
முகிலனின் முடி கறுப்பு நிறம். அவன் தாத்தாவின் முடி_______________நிறம்.
நீலம்
சிவப்பு
வெள்ளை
சரியான இடப்பெயரை எழுதுக
அப்பா______________தபால் தலைகளை வாங்கினார்.
திடலில்
அஞ்சலகத்தில்
மண்டபத்தில்
அம்மா கடைக்குச் சென்று காய்கறிகளும் இனிப்பான பழங்களும் வாங்கி வந்தார். இதில் எது பண்புப் பெயர்?
கடை
இனிப்பான
காய்கறி
வாக்கியத்தில் உள்ள சினைப்பெயரை அடையாளம் காண்க:
குரங்கின் வால் நீளமானது.
குரங்கு
வால்
நீளம்
குறுகிய ஓசையுடைய சொற்களை எவ்வாறு அழைப்பர்?
உயிர் எழுத்து
நெட்டெழுத்து
குற்றெழுத்து
ங், ஞ், ண், ந், ம்,ன் எனும் எழுத்துக்களின் வகைகளை இலக்கணம் எவ்வாறு அழைக்கின்றது?
இடையினம்
மெல்லினம்
வல்லினம்
ஆட்டு____________ அருகிலுள்ள புல்வெளியில் புற்களை மேய்ந்தன.
மந்தை
கூட்டம்
கும்பல்
கம்பீரமான உடையுடன் இராணுவப் ___________ வீரர்கள் வரிசையாக நின்றனர்.
படை
கூட்டம்
குவியல்
மாணவர்கள் சிற்றுண்டிச் சாலையில் உணவு வாங்குகிறார்கள்?
இதில் எது இடப்பெயர்?
மாணவர்கள்
சிற்றுண்டிச் சாலை
உணவு
சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு _____________சொல்லிக் கொடுப்பது சிறந்தது.
கெட்டது நல்லது
நன்மை தீமைகளைச்
எல்லாவற்றையும்
இணைமொழிகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்தெடுக்கவும்.
____________நலமாக உள்ளார்கள் என கந்தன் தன் தந்தையிடம் கூறினான்.
அம்மாவும் குழந்தையும்
அம்மாவும் சேயும்
தாயும் சேயும்
திரு.அண்ணாமலை_______________பாடுபட்டு தன் குழந்தைகளை ஆளாக்கினார்.
அல்லும் பகலும்
தினமும்
நன்மை தீமை
மருத்துவர்கள் _______________பாடுபட்டு கோவிட் 19 தொற்று நோயை ஒழித்தனர்.
தாயும் சேயும்
அல்லும் பகலும்
தினமும்
ஒரு பொருளின் உறுப்புகளைக் குறிப்பது______________
சினைப்பெயர்
பண்புப் பெயர்
தொழிற் பெயர்
இடப்பெயர்
