Worksheetsமரபுத்தொடர்
Total questions: 10
Worksheet time: 5mins
தன் தந்தை எவ்வளவோ எடுத்துக் கூறியும் வெளிநாடு சென்று மருத்துவத் துறையில் பயிலும் எண்ணத்தில் உறுதியாக நின்றான்.
கரை கண்டவர்
முயல் கொம்பு
ஆணித்தரம்
ஈடுகட்டுதல்
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியில்............................
கரை கண்டவர்
கம்பி நீட்டினார்
தலை குனிந்தார்
நமது நாட்டில் அமல்படுத்தப்படும் பொருள் சேவை வரி எக்காலத்திலும் மக்களுக்குச் சுமையாக இருக்காது எனப் பிரதமர்............................ தமது உரையில் கூறினார்.
அள்ளி விட்டு
கடுக்காய் கொடுத்து
ஆணித்தரமாக
அண்மையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரான திரு. சுந்தர் பிச்சை தொழில் நுட்பத்தில் ..............................
தட்டிக் கழித்தார்
கரை கண்டவர்
கை கொடுத்தார்
மலேசியத் திருநாட்டின் மூத்த முன்னனிப் பாவலர்களுள் ஒருவர்தான் கவிச்சுடர் காரைக்கிழார். அன்னாரின் மறைவுக்குப் பிறகு அவருக்கு ஈடான கவிச்சுடர் இனி பிறப்பது .............................. என்று பல அறிஞர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
முயல் கொம்பு
திட்ட வட்டம்
கரி பூசுதல்
திரு. தமிழ்ச்செல்வன் ................. உழைத்ததால் தொழிலதிபர் ஆனார்.
தாளம் போட்டு
முழுமூச்சுடன்
ஒரு கை பார்த்தல்
ஆறப் போடுதல்
அமுதா, தனக்கு அந்த நாய்க்குட்டி தான் வேண்டும் என்று தன் பெற்றோரிடம் அடம் பிடித்தாள்.
கிள்ளுக் கீரை
காது குத்துதல்
கரி பூசிதல்
குரங்குப் பிடி
குமுதா : கவியாழினி, இனிமேல் அமுதனிடம் எந்த இரகசியத்தையும் கூறாதே. அவன் ஒரு ................. என்பது அனைவருக்கும் தெரிந்ததுதானே.
கவியாழினி : சரி குமுதா. இனிமேல் எச்சரிக்கையாக நடந்து கொள்கிறேன்.
முழு மூச்சு
கங்கணம் கட்டுதல்
ஓட்டை வாய்
கண்ணும் கருத்துமாக
மதிவாணன் வியாபாரத்தில் நஷ்டம் அடைந்ததால் தன் சேமிப்பை இழந்தான். அதனால் உணவுக்கே ................................
குரங்குப் பிடிப் பிடித்தான்.
கை கொடுத்தான்.
நாக்கு நீட்டினான்.
தாளம் போடுகிறான்
வியாபாரத்தில் பாதிக்கப்பட்ட அரசுக்கு அவனுடைய மாமா சரியான நேரத்தில் ........................ உதவினார்.
முழு மூச்சுடன்
கை கொடுத்து
கண்ணும் கருத்துமாய்
கையும் களவுமாய்
