NEW
Font size
Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 3mins
இராணுவ வீரர்கள் எதிரிகளின் கோட்டைக்குள் _________________.
பறந்தனர்.
வந்தனர்.
பாய்ந்தனர்.
நுழைந்தனர்.
கீழ்க்காண்பனவற்றுள் சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
சிறுவர்கள் ஆடிப்பாடி மகிழும்.
சிறுவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தன.
சிறுவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
சிறுவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தார்.
கீழ்க்காணும் படத்திற்கு ஏற்ற பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
பண்புப்பெயர்
சினைப்பெயர்
தொழிற்பெயர்
பொருட்பெயர்
கீழ்க்காண்பனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.
திடல்............பண்புப்பெயர்
ஏற்றுமதி.........இடப்பெயர்
நள்ளிரவு.............காலப்பெயர்
ஆசிரியர்........தொழிற்பெயர்
கீழ்க்காண்பனவற்றுள் பண்புப்பெயரைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
திரு.முகிலன் ஒரு மருத்துவர் ஆவார்.
சிவா திடலில் பந்து விளையாடினான்.
அஃது அமுதா வரைந்த ஓவியம் ஆகும்.
கேமரன் மலைப்பகுதி பசுமை நிறைந்த இடமாகும்.
கீழ்க்காண்பனவற்றுள் எது தொழிற்பெயர் அல்ல?
வரைதல்
கற்பித்தல்
மருத்துவர்
பின்னுதல்
நீர்,நீவீர் ஆகிய சொற்கள் ___________________ இடத்தைக் குறிக்கும் சொற்களாகும்.
தன்மை
படர்க்கை
முன்னிலை
"அண்ணா,_______________புத்தப்பையைப் பார்த்தீர்களா? " எனக் கேட்டுக் கொண்டே சுற்றிலும் தேடினாள் வாணி.
என்
உன்
நான்
உமது
பின்வரும் வாக்கியங்களில் தன்மையைக் குறிக்கும் வாக்கியம் எது?
அனைவரும் நடிப்புத் திறனை மேடையில் காட்டினர்.
கவியரசு வைரமுத்து கவிதைகளின் மூலம் மக்களைக் கவர்ந்தார்.
நாங்கள் சாரணர் இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
குழந்தைகள் சிலர் தேவாரப் பாடல்களை இனிமையாகப் பாடுகின்றனர்.
ஒருமையைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
