Worksheetsஉணவு பதனீடு முறைகள் ( ஆண்டு 6 )
Total questions: 10
Worksheet time: 5mins
1. பின்வரும் கூற்றுகளில் எது நுண்ணுயிர்கள் வளர ஏற்ற சூழலாகும்?
வெப்பம் மற்றும் குளிர்
ஈரப்பசை மற்றும் அதிக குளிர்
நீர், காற்று, மிதமான வெப்பம்
தாதுச்சத்து மற்றும் குளிர்
2.மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவு பொருளுக்கு ஏற்ற சரியான பதனிடும் முறை யாது?
புகையிடுதல்
உப்பிடுதல்
ஊற வைத்தல்
குளிர்ந்துறையச் செய்தல்
3. எந்தப் பொருள் மிக விரைவில் கெடக் கூடியது?
4. பின்வரும் உணவு பொருள்களில் எது குளிர்ந்துறைத்தலுக்கு ஏற்றது அல்ல?
பனிக்கூழ்
இறைச்சி
இறால்
வேர்க்கடலை
5. அம்மா சமையலுக்குப் புளிக்காடியைத் தேடினார்; ஆனால் அது தீர்ந்து விட்டது. அதற்குப் பதிலாக அவர் வேறு எந்த உணவுப் பொருளைப் பயன்படுத்தலாம்?
சீனி
மிளகாய்
எலுமிச்சை
ஆரஞ்சு
6. எந்த உணவு பதனீடு முறையில் இந்தப் பால் பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது?
புகையிடுதல்
குளிர்ந்துறையச் செய்தல்
பாஸ்டர் முறை
புட்டியில் இடுதல், கலனிடுதல்
7. மீன்களை உலர வைக்க ஏன் சூரிய வெப்பத்தின் கீழ் வைக்கிறார்கள்?
மீன் சுவையை அதிகரிக்க
மீனைச் சூடாக்குவதற்கு
மீனை மேலும் வழ வழப்பாக்குவதற்கு
மீனிலிருந்து நீரை வெளியாக்குவதற்கு
8. உணவு பதனிடுதல் என்பதன் பொருள் என்ன?
உணவிலுள்ள அனைத்து குச்சியங்களையும் கொல்லும் செயற்பாங்கு
கெட்டுப்போவதைத் தாமதப்படுத்த உணவைப் பாதுகாக்கும் ஒரு செயற்பாங்கு
காலத்திற்கும் உணவின் புதியத் தன்மையை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாங்கு
பல வருடங்களுக்கு உணவின் தாதுச்சத்தை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாங்கு
9. புளிக்காடி மற்ற காடித்தன்மைக் கொண்ட திரவங்கள் மற்றும் சீனி கரைச்சலில் உணவு பொருள்கள் ஊற வைக்கப்படுகின்றன்.
கொதிக்க வைத்தல்.
ஊறவைத்தல்
உப்பேற்றம்
உலர்த்துதல்
10. கெட்டுப்போன சோற்றின் தன்மை என்ன?
புளிப்புத் தன்மை மற்றும் நுரைத்தள்ளும்.
இழையமைப்பு மாறி வழவழப்பு மற்றும் பிசுபிசுப்புத் தன்மை உண்டாகும்.
திரித்து போகும் மற்றும் நிறமாற்றம்.
கரும்புள்ளிகள் தோன்றும் மற்றும் வாடி போகும்.
